SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிக்கு 22 கோடி : மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

2018-12-09@ 01:22:44

சென்னை: பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும், அன்னிய முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கவும் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில், 2 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் ஜனவரி மாதம்  23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்ற உள்ளது. இதற்கான பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் செய்யவும், சென்னை அழகுபடுத்தவும் சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில்  உட்கட்டமைப்பு மற்றும் அழகுபடுத்துதல் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் கூட்டத்தில் மாநகராட்சி, மெட்ரோ ரயில், காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மண்டலம் மற்றும் தலைமையிடம் அளவில் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பான விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி பேருந்து சாலைகள் துறை மூலம் 9.9 கோடி மதிப்பீலான பணிகளும், 12 வது மண்டலத்தில் 6.9 கோடி மதிப்பிலான பணிகளும், 13 வது மண்டலத்தில் 75 லட்சம் மதிப்பிலான பணிகளும், பூங்கா துறை மூலம் 2.9 கோடி மதிப்பிலான பணிகளும், மின்சார துறை சார்பில் 1.62 கோடி மதிப்பிலான பணிகளும், கட்டத் துறை சார்பில் 48 லட்சம் மதிப்பிலான பணிகள் என்று மொத்தம் 22.80 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளை செய்ய மாநகராட்சி மேற்கொள்ள உள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் இந்த மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்