SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

6வது நாளாக தொடர் போராட்டம் மெட்ரோ வாட்டர் லாரிகள் மூலம் வீடுகளில் இருந்து கழிவுநீர் அகற்றம்

2018-12-09@ 01:21:55

சென்னை:  சென்னை ராஜிவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பள்ளிக்கரணை மேடவாக்கம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை வசதி கிடையாது. இப்பகுதிகளில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தொட்டிகள் அமைக்கப்பட்டு கழிவு நீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த கழிவுநீரை ஒரு லாரிக்கு 450 முதல் 600 வரை கட்டணம் செலுத்தி தனியார் லாரிகள் மூலம் அகற்றுகின்றனர். பின்னர் பெருங்குடியிலுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஊற்றப்படுகிறது. இதற்கு ஒரு லாரிக்கு 100 கட்டணம் செலுத்தப்படும். மீதித்தொகையானது பெட்ரோல், லாரி வாடகை, டிரைவர் சம்பளமாக பயன்படும். இந்நிலையில் மெட்ரோவாட்டர் சார்பாக கடந்த 1ம் தேதி முதல், லோடு ஒன்றுக்கு 250 கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு லாரிகளின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து துரைப்பாக்கம் 200அடி சாலையோரம் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் காரணமாக, நேற்று 6வது நாளாக லாரிகள் இயக்கப்படாததால் ஐடி நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.இதையடுத்து மெட்ரோ வாட்டருக்கு சொந்தமான கழிவுநீர் லாரி மூலம் பெருங்குடி, கொட்டிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்பில் கழிவு நீர் அகற்றப்பட்டு வருகிறது. எனவே பெருங்குடி பகுதி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கு தனியார் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தை தோல்வி

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, அதிமுகவை சேர்ந்த ஜெயவர்தன் எம்.பி, முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன் உள்ளிட்டோர் நேற்று லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமைச்சரிடம் பேசி, லோடு ஒன்றுக்கு 250 கட்டணம் மட்டும் செலுத்த ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். ஆனால் லாரி உரிமையாளர்கள் அதனை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்