SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூந்தமல்லி மதுபான உற்பத்தி தொழிற்சாலையில் 2வது நாளாக விடியவிடிய வருமான வரி சோதனை

2018-12-09@ 01:21:19

சென்னை: பூந்தமல்லியில் உள்ள தனியார் மதுபான உற்பத்தி தொழிற்சாலையில் நேற்று 2வது நாளாக தொடர்ந்து வருமான வரி சோதனை நடந்தது. சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பூந்தமல்லியில் தனியாருக்கு சொந்தமான என்ரிகா எண்டர்பிரைசஸ் என்கிற மதுபான தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த மதுபான தொழிற்சாலையில் இருந்து மதுபானங்கள் உற்பத்தி செய்யப்பட்டு டாஸ்மாக் குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் பாலாஜி குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அதன் ஒரு பகுதியாக, பூந்தமல்லியில் உள்ள மதுபான தொழிற்சாலைக்கு 2 வாடகை கார்களில் வந்த 14 வருமான வரித்துறை அதிகாரிகள், அங்கு தொடர்ந்து விடிய, விடிய 2வது நாளாக நேற்று இரவு வரை சோதனையில் ஈடுபட்டனர்.மேலும், மதுபானங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வைத்திருக்கும் குடோனை மூடிய அதிகாரிகள், மேற்கொண்டு மதுபானங்கள் அந்த குடோனுக்கு வராமல் கணக்கு எடுத்து வருகின்றனர். ஆனால் ஊழியர்கள் தொழிற்சாலைக்குள் வந்து செல்லவும், மது உற்பத்தி செய்யவும் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை. சோதனையின் முடிவில் ஏதேனும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதா என்கிற தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்