SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனுடன் பிரபல கார் கம்பெனி தலைமை செயல் அலுவலர் சிக்கினார்

2018-12-09@ 01:20:09

சென்னை: இந்தியாவில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனுடன் பிரபல கார் கம்பெனி தலைமை செயல் அலுவலர் சிக்கினார். அவரிடம் எழுதி வாங்கி கொண்டு, அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் பிட்ஷர் ஜாக்சன் (45). பிரபல கார் கம்பெனியின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். இந்தியாவுக்கான அந்த கார் கம்பெனியின் போர்டு மீட்டிங், சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில், கடந்த 7ம் தேதி நடந்தது. இதையொட்டி, இந்த மீட்டிங்கில் கலந்து கொள்வதற்காக பிட்ஷர் ஜாக்சன், கடந்த 6ம் தேதி நள்ளிரவு ஜெர்மனில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். நேற்று முன்தினம் மீட்டிங் முடிந்து நள்ளிரவு 12 மணிக்கு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு செல்ல விமான நிலையம் வந்தார். அப்போது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், பிட்ஷர் ஜாக்சன் உடமைகளை சோதனை செய்தனர். அவரது பையில், நமது நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள சாட்டிலைட் போன் இருந்தது. இதையடுத்து அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர்.

அதற்கு, எங்களது நாட்டில் சாட்டிலைட் போனுக்கு தடை இல்லை. நான் பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளேன். எந்த நாட்டிலும் இதற்கு தடை இல்லை. அதுபோல் கடந்த 6ம் தேதி சென்னை வந்தேன். இங்கு ஒரு எச்சரிக்கை பலகையும் இல்லை. என்னை சோதனை செய்த அதிகாரிகளும், அதுபற்றி எதுவும் கூறாமல் அனுப்பிவிட்டனர் என கூறினார். ஆனால், அதை பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கவில்லை. இந்தியாவில், சாட்டிலைட் போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை நீங்கள் கொண்டு வருவதற்கு முன், இங்கு பயன்படுத்தலாமா என இணையதளத்தில் ஆய்வு செய்திருக்க வேண்டும்.இல்லாவிட்டால், சென்னை வந்தபோது, சுங்க அதிகாரிகளிடம் அதை கொடுத்துவிட்டு, சொந்த ஊர் செல்லும்போது அதை வாங்கி சென்றிருக்கலாம். அதையும் நீங்கள் செய்யவில்லை என தெரிவித்தனர்.இதையடுத்து அதிகாரிகள், பிட்ஷர் ஜாக்சனின் பயணத்தை ரத்து செய்து, அவரிடம் இருந்த சாட்டிலைட் போன், அவரது பாஸ்போர்ட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் பிட்ஷர் ஜாக்சனை, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், லண்டன் தூதரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதைதொடர்ந்து, விசாரணையின்போது வரவேண்டும் என பிட்ஷர் ஜாக்சனிடம் எழுதி வாங்கி கொண்டு நேற்று நள்ளிரவு விமானத்தில் அவரை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், சாட்டிலைட் போன் கொண்டு வருவது பல நாடுகளில் தடை இல்லை. இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அரசு இதற்கு தடை விதித்துள்ளதால், இதுபோன்ற கெடுபிடிகள் உள்ளன. இதுபோல் வருபவர்களிடம் எழுதி வாங்கி கொண்டு அனுப்பிவிடுவோம் என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்