SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மார்க்கெட் விலையை விட அதிகம் இருக்கும் நிலையில் சோப்பு, எண்ணெய் வாங்க சொல்லி ரேஷன் கடையில் வற்புறுத்தல்

2018-12-09@ 01:18:55

சென்னை: ரேஷன் கடைக்கு வரும் பெண்களிடம், மானிய விலையில் விற்பனை செய்யாத பொருட்களை வாங்க சொல்லி பெண் ஊழியர் கட்டாயப்படுத்துகிறார். அதற்கு, நுகர்வோர் அவரிடம் முடியாது என்று சொன்னதால் வாய்தகராறு ஏற்படும் வீடியோ காட்சி வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. தமிழக அரசு, ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசி வழங்குகிறது. சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு, மண்எண்ணெய் ஆகியவைகளை மானிய விலையில் வழங்குகிறது. இதுதவிர, அனைத்து ரேஷன் கடைகளிலும் சமையல் எண்ணெய், பயறு, சோப்பு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பொருட்கள் தனியார் கடைகளில் விற்பதைவிட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், தரம் இல்லாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளிக்கிறார்கள். ஆனால், இந்த பொருட்கள் வாங்கினால்தான் மானிய விலையில் பொருட்கள் வழங்கப்படும் என ரேஷன் ஊழியர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். இதுபற்றி, அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் பலமுறை கேட்டபோதும், பொதுமக்களை யாரும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூறுகிறார்.

இதுபற்றி ரேஷன் ஊழியர்களிடம் கேட்டால், அமைச்சர் மற்றும் கூட்டுறவு உயர் அதிகாரிகள் பொதுமக்களிடம் அப்படி கூறுகிறார்கள். ஆனால் ரேஷன் கடை ஊழியர்களிடம் இதுபோன்ற பொருட்களை கட்டாயம் விற்பனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மாதம் மாதம் கூட்டுறவு துறை அதிகாரிகள் குவித்து வருகிறார்கள். அவர்களுக்கு இதனால் கமிஷன் கிடைக்கிறது என்கிறார்கள். இந்த நிலையில் சென்னை, பள்ளிக்கரணை பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடை ஊழியர் நுகர்வோரிடம் கட்டாயமாக மளிகை பொருட்களை விற்பனை செய்யும் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. அது வருமாறு: ரேஷன் வாங்க வந்த ஒரு பெண்ணிடம் ரேஷன் கடை ஊழியர் கேட்காமலேயே பொருட்களுக்கான பில் போடுகிறார். அதற்கு பணம் இல்லை என்று சொல்கிறார்.

ஊழியர்: ரேஷன் கடைக்கு வந்தா மட்டும் பணம் இல்லையென்று ராமாயணம் பாடுறீங்கள். வேற எங்காவது போனா இப்படி சொல்வீங்களா. எல்லாரும் எல்லாத்துக்கும் ரூல்ஸ் பேசினா எல்லாரும் பேசிக்கிட்டுதான் இருக்கனும்.
நுகர்வோர்: ஒரு அளவுதான அக்கா எங்களால் பணம் செலவு பண்ண முடியும்.
ஊழியர்: அரசுதான் எங்களுக்கு அனுப்பி வைக்கிறாங்க. எங்க வீட்டில இருந்தா எடுத்து வந்து விற்பனை செய்கிறேன்.
நுகர்வோர்: வாங்காம இருந்தா பரவாயில்லை. என்னால முடிந்ததை வாங்குறேன். ஆனால் நீங்க இதைதான் வாங்கனும்னு என்னை கட்டாயப்படுத்தக்கூடாது. எங்களால் இஷ்டப்பட்டதை வாங்க சொல்லித்தான் அரசாங்கம் சொல்லி இருக்காங்க.
ஊழியர்: நீ இஷ்டப்படுவ... ஆனால் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு பொருள் அனுப்பி வைக்கிறாங்களே. இதை நான் எங்க போயி விற்கிறது.
நுகர்வோர்: கடையில் இருக்கிற ரேட்ட விட அதிகமாக இருக்கு ரேஷன் கடையில். நாங்க எப்படி வாங்க முடியும்.
ஊழியர்: நாங்கள் பொருள்ல இருக்கிற ரேட்டத்தான் சொல்றோம்.
நுகர்வோர்: நீங்க நம்பர் கொடுங்க நான் பேசிக்கிறேன்.
ஊழியர்: நான் ஏன் நம்பர் கொடுக்கனும். அவன் குடோன் போட்டு ஆள் வைச்சு இங்க அனுப்பி வைத்து விக்கிறான். நீ தான் ஓவரா ரூல்ஸ் பேசிக்கிட்டு இருக்க. அப்போ ஏன் ரேஷன் கடையில சர்க்கரை வாங்குறீங்க. தனியார் கடையில் போய் சர்க்கரை வாங்க வேண்டியதுதான...
நுகர்வோர்: சர்க்கரை மாதிரி மற்ற பொருட்களையும் நீங்க குறைந்த விலைக்கு கொடுக்கனும். ஏன் தனியார் கடையைவிட அதிகமா விற்பனை செய்றீங்க. என் கார்டை எடுத்து வந்து வாங்கும்போது, நான் இஷ்டப்பட்டதைதான் வாங்க முடியும்.
ஊழியர்: காசு எடுத்திட்டு வராட்டாலும், வாய் மட்டும் பேசுறீங்க.
நுகர்வோர்: நீங்க பேசுனதுக்கு பதில் பேசினா தப்பா. நீங்கதான் உயர் அதிகாரிகளிடம் சொல்லணும். கடையில் எல்லாரும் திட்டுறாங்க, பொருட்கள் வாங்க மாட்றாங்கன்னு சொல்லுங்க.
ஊழியர்: நான் ஒரு ஆள் சொன்னா, அவனுங்க (கூட்டுறவு அதிகாரிகள்) திருந்திடுவானுங்க பாரு... இனி பொருட்கள் விற்க சொல்லி எங்களை வற்புறுத்த மாட்டாங்களா. போம்மா... பலமுறை சொல்லியாச்சு. அவனுங்க கொள்ளை அடிக்கிறதுக்கு எங்களை யூஸ் பண்ணிக்கிறாங்க...இவ்வாறு உரையாடல் முடிவடைகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicovalcano

    மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

  • modipuja

    உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்