SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசியல் கட்சியினரின் முட்டுக்கட்டையால் ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு திட்டம் மின்வாரியத்தில் இழுபறி

2018-12-09@ 01:17:54

சென்னை: தமிழ்நாடு மின்வாரிய அலுவலகங்களுக்கு தாமதமாக வருவோரை கட்டுப்படுத்த ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவு திட்டம் கொண்டுவர திட்டமிடப்பட்டது. இதற்கு அரசியல் கட்சியினர் முட்டுக்கட்டை போட்டு வருவதால், ‘ஓபி’ அடிக்கும் ஊழியர்கள் தொடர்ந்து ‘ஜாலி’யாக இருந்து வருகின்றனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் பொதுமக்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் பிரிவு அலுவலகங்கள், துணை மின்நிலையங்கள், மின் நிலையங்கள் ஆகியவை உள்ளன. இவற்றில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தினசரி அலுவலகத்திற்கு வந்ததும், தங்களின் வருகை பதிவை பிரத்யோகமாக இருக்கும் பதிவேடுகளில் பதிவு செய்து வருகிறார்கள். இந்தமுறையில் தாமதமாக வந்தாலும், சரியான நேரத்திற்கு வந்தது போல் மாற்றி ஒருசிலர் பதிவு செய்துவருகிறார்கள். இவ்வாறான செயல்களில் பெரும்பாலும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும், தொழிற்சங்கங்களை சேர்ந்த சிலரும் ஈடுபடுகிறார்கள். மேலும் தாமதமாக அலுவலகத்துக்கு வந்தாலும், பிறகு சொந்த பணிகளுக்கு சென்று விடுகிறார்கள். அதிகாரிகள் கேட்டால், அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை.

இதனால் மழை, புயல், விபத்து போன்ற இக்கட்டான காலக்கட்டங்களில் சீரமைப்பு பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் ஒருசில நேரங்களில் தினசரி பணிகளை செய்வதில் கூட தாமதம் ஏற்படுகிறது. இதைதடுக்க அதிகாரிகளும், தினசரி சரியாக அலுவலகத்திற்கு வரும் பணியாளர்களும் ‘பயோமெட்ரிக்’ முறையை கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதையேற்றுக்கொண்ட அதிகாரிகள் கடந்த ஓராண்டிற்கு முன்பே, அனைத்து அலுவலகங்களிலும் ‘பயோமெட்ரிக்’ பதிவை செயல்படுத்த தயாராகினர். ஆனால் அரசியல் கட்சியினர், அதை செயல்படுத்துவதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.  இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘சம்மந்தப்பட்ட திட்டத்தை செயல்படுத்த ஊழியர்கள், அதிகாரிகள் சம்மதம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அரசியல் கட்சிகளில் இருக்கும் ஊழியர்கள் மட்டுமே எதிர்க்கிறார்கள். இருப்பினும் சம்மந்தப்பட்ட திட்டத்திற்காக, அதற்கான கருவிகளை வாங்க ‘டெண்டர்’ கோரப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து அலுவலகங்களிலும் ‘பயோமெட்ரிக்’ திட்டம் செயல்படுத்தப்படும்’’ என்றனர்.

என்ன பயன்?

அனைத்து இடங்களிலும் ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவு கொண்டுவரப்படும் பட்சத்தில், ஊழியர்கள் விதிமுறைபடி அலுவலக நேரத்திற்கு வந்து தங்களது கைரேகையை வைக்க வேண்டும். ஒருநிமிடம் தாமதமானால் கூட, ஆப்சென்ட் ஆகிவிடும். எனவே குறிப்பிட்ட நேரத்திற்கு ஊழியர்கள் வந்தாக வேண்டியிருக்கும். அப்போது அரசியல் கட்சிகளில் இருக்கும் ஊழியர்கள் தாமதமாக அலுவலகத்திற்கு வரமுடியாது. எனவே தான் மின்வாரிய அதிகாரிகளின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mexicovalcano

  மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

 • modipuja

  உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

 • animalsmuggling

  இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

 • swimminggeneva

  ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

 • Cairoegyptopen

  மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்