SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடம்பாக்கம் வக்கீல் கொலை வழக்கு டிசம்பர் 19ம் தேதி சாட்சி விசாரணை தொடக்கம்

2018-12-09@ 01:17:06

சென்னை: கள்ளக்காதல் விவகாரத்தால் வக்கீல் கொலை செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணை வரும் 19ம் தேதி முதல் தொடங்குகிறது. கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்தவர் முருகன். சென்னை உயர் நீதிமன்ற வக்கீலாக தொழில் செய்து வந்தார். இவரது மனைவி லோகேஷினி. இவருக்கும் அவருடன் பள்ளியில் படித்த சண்முகநாதன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, மனைவியை வக்கீல் முருகன் கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2016 ஜூன் 5ம் தேதி முருகன் வாடகைக்கு வீடு பார்க்கச் சென்றார். அப்போது, அவரை ஆட்டோவில் பின்தொடர்ந்த சிலர் கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இதுதொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வக்கீல் முருகனை அவரது மனைவியே கூலிப்படையை வைத்து கொலை செய்தது தெரியவந்தது. கொலை நடந்தவுடன் லோகேஷினி சண்முகநாதனை தொடர்பு கொண்டு பேசிய போன் அழைப்புகளை வைத்து போலீசார் குற்றவாளிகளைப் பிடித்தனர்.

அதன்படி, கொலை செய்ய ஏற்பாடு செய்த லோகேஷினி, சண்முகநாதன், சுப்பு, சுப்பிரமணி, முரளி, ஜஸ்டின் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை, கூட்டுச்சதி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் ெசய்யப்பட்டது. வழக்கு சென்னை முதன்மை ெசஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி சுபா தேவி முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, லோகேஷினி, சண்முகநாதன், சுப்பு, சுப்பிரமணி, முரளி, ஜஸ்டின் ஆகியோர் ஆஜராகினர். லோகேஷினி சார்பில் வக்கீல் துரைப்பாண்டியன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் வரும் 19ம் தேதி முதல் சாட்சி விசாரணை தொடங்கும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்