SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாலையோரங்களில் அனுமதியின்றி கொடிக்கம்பம் இருக்கிறதா? : ஊராட்சிகளுக்கு ஐகோர்ட் கேள்வி

2018-12-09@ 01:16:31

சென்னை: சாலையோரங்களில் அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் வைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யும்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் வைக்க தடை விதிக்க கோரியும், இதுவரை வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றக் கோரியும் சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் 2016ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல  வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: அனுமதி இல்லாமல் கொடிக்கம்பங்கள் வைப்பதை சட்டவிதிகள் தடை செய்துள்ளன.

இந்த சட்ட விதிகளை மீறி வைக்கப்படும் கொடிக்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் உள்ளாட்சி அமைப்புகள் கண்மூடி வேடிக்கை பார்ப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. அனுமதியின்றி வைக்கப்படும் இதுபோன்ற கொடிக்கம்பங்கள் மக்கள் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்து கின்றன. எனவே, சாலையோரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் வைக்கப்படவில்லை என்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். இந்த இடைக்கால உத்தரவின் நகலை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் டிஜிபி உள்ளிட்டோருக்கு  உயர் நீதிமன்ற பதிவுத்துறை அனுப்ப வேண்டும். வழக்கு விசாரணை ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்