SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடரும் பாரம்பரியம் சென்னை ஐகோர்ட்டின் வாயில்கள் இன்று மூடல்

2018-12-09@ 01:15:53

சென்னை:  பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் பாரம்பரிய நடைமுறைப்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஏழு வாயில்களும் இன்று ஒரு நாள் மூடப்படுகிறது. 150 ஆண்டுகள் பழமையும், பெருமையும் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் கன்னிகாபரமேஸ்வரி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலத்தை யாரும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்பதற்காக வருடத்திற்கு ஒரு நாள் உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு, சாவி கோயிலில் வைக்கப்படும். இந்த  பாரம்பரிய நடைமுறையானது இன்று வரை கடைபிடிக்கப்பட்டுவருகிறது.  

அதன்படி, உயர் நீதிமன்றத்தின் ஏழு வாயில்களும்  நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை மூடப்படும் என்று உயர் நீதிமன்ற நிர்வாகப் பதிவாளர் தேவநாதன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் நகல் அனைத்து வாயில்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த 24 மணி நேரத்தில் நீதிமன்ற வளாகத்துக்குள் அரசு துறையினர், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் என யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்