SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சார்பதிவு அலுவலகங்களில் ஆன்லைனில் திருமணம், சங்கம் சீட்டுகளை பதிவு செய்யலாம் : திட்டத்தை முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

2018-12-09@ 01:15:13

சென்னை: ஆன்லைன் மூலம் திருமணம், சீட்டு, சங்கங்கள் பதிவு செய்யும் நடைமுறையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாளை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் 575 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் மற்றும் திருமணம், சீட்டு மற்றும் சங்கங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் பத்திரம் பதிவு செய்யும் திட்டத்தை கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ெதாடர்ந்து, பிப்ரவரி 13ம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. தற்போது பெரும்பாலான பத்திரங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுகிறது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், திருமணம், சீட்டு, சங்கம் உள்ளிட்ட 17 இனங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறையை கொண்டு வர பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, சார்பதிவாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தது. தொடர்ந்து இந்த திட்டத்தை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை சோதனை அடிப்படையில் 50 சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால், சார்பதிவாளர்கள் கூடுதல் நாட்கள் சிறப்பு பயிற்சி  தர வேண்டும் என்று ேகாரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக் கொண்ட பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் ஆகஸ்ட் 1ம் ேததி நடைமுறைப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். இந்நிலையில், ஆன்லைன் திருமணம், சீட்டு விண்ணப்பிப்பது குறித்து அதிகாரிகளுக்கு 15 நாட்கள் வரை பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, சார்பதிவாளர்கள் கருத்துக்கள் கேட்கப்பட்டு, சில மாறுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ஆகஸ்ட் 8ம் தேதி முதல் ஆன்லைன் திருமண பதிவு நடைமுறைக்கு வந்தது. 15 நாட்கள் சோதனை அடிப்படையில் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டது. அதன்பிறகு இத்திட்டத்தை ஆன்லைனில் முழுமையாக நடைமுறைப்படுத்தும் நோக்கில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை நாளை (10ம் தேதி) தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைக்கிறார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • malar_modi12

    2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

  • peruearthqq1

    பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

  • 20aacident_died11

    சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்