SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகம் முழுவதும் நடந்த லோக் அதாலத்தில் 86,638 வழக்குகளில் தீர்வு : 283 கோடி பைசலானது

2018-12-09@ 01:14:00

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடந்த லோக் அதாலத்தில் 86 ஆயிரத்து 638 வழக்குகள் விசாரிக்கப்பட்டது. இதன் மூலம் 283 கோடியே 88 லட்சத்து 35 ஆயிரத்து 155 ரூபாய்  பைசல் செய்யப்பட்டது. நாடு முழுவதும் தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாநில அளவில் லோக் அதாலத்தும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேசிய அளவில் நாடு முழுவதும் லோக் அதாலத் நடத்தபடுகின்றது. தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணைக் குழு சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று லோக் அதாலத் நடத்தப்பட்டது. இதில், கிரிமினல் வழக்குகள், வங்கி காசோலை மோசடி, கடன் நிலுவை ஆகியவை தொடர்பான வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் சிவில் வழக்குகள் உள்ளிட்ட 11 வகையான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் நிலுவையில் உள்ள 1 லட்சத்து 68 ஆயிரத்து 518 வழக்குகளும், நீதிமன்றத்திற்கு வராமல் நிலுவையில் உள்ள 79 ஆயிரத்து 87 வழக்குகளும் என மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 605 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 அமர்வுகள், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 6 அமர்வுகள், மாவட்ட அளவிலும், தாலுகா அளவில் என மொத்தம் 468 அமர்வுகள் அமைக்கப்பட்டன.  மொத்தமுள்ள வழக்குகளில் 86 ஆயிரத்து 638 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு 283 கோடியே 88 லட்சத்து 35 ஆயிரத்து 155 ரூபாய் பைசல் ெசய்யப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் ஜெயந்தி உத்தரவின்பேரில் நடைபெற்ற லோக் அதாலத்தில் 35 ஆயிரத்து 68 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் 26 ஆயிரத்து 987 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு 57 கோடி பைசல் செய்யப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicovalcano

    மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

  • modipuja

    உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்