SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பாஜவுக்கு எதிராக வலுவான கூட்டணி : எம்பி கனிமொழி பேட்டி

2018-12-09@ 01:08:12

சென்னை: எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பாஜவுக்கு எதிராக வலுவான ஒரு கூட்டணியை அமைப்போம் என திமுக எம்பி கனிமொழி கூறினார். திமுக எம்பி கனிமொழி, சென்னையில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் கஜா புயல் நிவாரணம் தொடர்பான விவகாரத்தை, நிச்சயமாக திமுக சார்பில் குரல் எழுப்புவோம். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க போதுமான தொகை ஒதுக்கவில்லை என்பதையும் பதிவு செய்வோம்.

ராஜிவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட 7 பேரின் விடுதலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்தினால், 7 பேர் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என்ற நிலை ஏற்பட்டால், திமுகவும் நிச்சயம் அதற்கு துணை நிற்கும். டிசம்பர் 10ம் தேதி டெல்லியில் நடக்க உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், திமுக சார்பில் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அப்போது அவர், கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை அனைத்து கட்சி தலைவர்களிடமும் வழங்குவார். 2019ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், நிச்சயமாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பாஜவுக்கு எதிராக வலுவான ஒரு கூட்டணியை அமைப்போம். அதற்கான முயற்சி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்