SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடிகை சாந்தினி காதல் திருமணம் : நடன இயக்குனரை மணக்கிறார்

2018-12-09@ 01:07:31

சென்னை: கே.பாக்யராஜ் மகன் சாந்தனு ஜோடியாக ‘பிளஸ் 2’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், சாந்தினி தமிழரசன். தொடர்ந்து ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்குஸ்கி’, ‘வண்டி’ உள்பட தமிழ் மற்றும் தெலுங்கில் 20 படங்களில் நடித்துள்ளார். ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’, ‘இரும்புத்திரை’ உள்பட பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய நந்தா என்பவருக்கும், சாந்தினிக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 12ம் தேதி திருப்பதி கோயிலில் சாந்தினி, நந்தா திருமணம் நடக்கிறது. இதையடுத்து 16ம் தேதி மாலை 6 மணியளவில், சென்னை மேயர் ராமநாதன் மண்டபத்தில் மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதுகுறித்து சாந்தினி கூறுகையில், ‘’நந்தாவும், நானும் 9 வருடங்களாக காதலித்தோம். சினிமாவில் நல்ல நிலையில் இருக்கும்போதே திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம். திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நான் தொடர்ந்து நடிப்பேன்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்