SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எஸ்சி, எஸ்டி கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு 822.91 கோடியை 2 மாதத்தில் வழங்க வேண்டும் : மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

2018-12-09@ 01:03:43

சென்னை: தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான நிதி 822.91 கோடியை 2 மாதங்களுக்குள் தமிழக அரசுக்கு தரவேண்டும் என்று மத்திய அரசுக்கு ெசன்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி உதவித்தொகை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒழுங்காக வழங்கப்படவில்லை. இதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததே காரணம் என்று தமிழக அரசு குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அசோக்குமார் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்களின் கல்விக்காக குறிப்பாக அவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி வழங்கப்பட வேண்டும். இந்த கல்வி உதவித் தொகை கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. எஸ்.சி. மாணவர்களுக்கு இதுவரை 1765.62 கோடியும், எஸ்டி மாணவர்களுக்கு 31.2 கோடியும் மத்திய சமூக நீதி மற்றும் பாதுகாப்புத் துறையால் வழங்கப்படவில்லை. கடந்த 2016-2017ம் ஆண்டுக்கான உதவித் தொகை 822.91 கோடி இதுவரை தமிழக அரசுக்கு கிடைக்கவில்லை. 2017-2018ம் ஆண்டுக்கான தொகை 162 கோடியும் வழங்கப்படவில்லை.

எனவே, இதுவரை தமிழகத்திற்கு தரப்படவேண்டிய 1765.62 கோடி மற்றும் எஸ்டி மாணவர்களுக்கு தரப்படவேண்டிய 31.2 கோடியை உடனே வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, மத்திய அரசு தமிழக அரசுக்கு இந்த கல்வி உதவித் தொகையில் 1546 கோடி வழங்கவில்லை.அந்த தொகையை கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார். மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கு கூடுதலாக 4 ஆயிரம் ஒதுக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகத்திடம் மத்திய சமூக நீதி துறை கோரியுள்ளது என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு:

எஸ்சி, எஸ்டி மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்காக வழங்கப்படும் நிதி மத்திய அரசால் வழங்கப்படவில்லை என்ற பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தமிழகத்தில் இந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. எனவே, கடந்த 2016-17ம் கல்வி ஆண்டுக்கான நிதி  822.91 கோடியையும், 2017-18ம் கல்வியாண்டுக்கான நிதி 162 கோடி ஆகியவற்றை மத்திய சமூக நீதி மற்றும் பாதுகாப்புத்துறை 2 மாதங்களுக்குள் தமிழக அரசுக்கு வழங்க வேண்டும்.2017-2018ம் கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை 162 கோடியை தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ஒரு மாதத்திற்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

  • 17-12-2018

    17-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்