SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் செல்போன் வழிப்பறி திருடியவரும் வாங்கியவரும் கைது : லாட்ஜிக்குள் ரகசிய விற்பனை கடை

2018-12-09@ 01:02:51

சென்னை: சென்னை பாடி, குமரன் நகர், சர்தார் படேல் தெரு, 7 ஸ்டார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சஞ்சீவ் பணிக்கர் (45). இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த ஜூன் 24ம் தேதி தி.நகர், விஜயராகவா ரோட்டில் செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் சஞ்சீவின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து, பாண்டிபஜார் காவல் நிலையத்தில் சஞ்சீவ் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி மடிப்பாக்கம், மூவரசன்பேட்டை, ஏரிக்கரை தெருவை சேர்ந்த அசான் அலி (27), என்பவரை போலீசார் நேற்று முன் தினம் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, இவர் திருடும் செல்போன்களை மண்ணடியைச் சேர்ந்த ரஷீது அகமது என்பவரிடம் கொடுத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதன்பேரில், திருட்டு செல்போன்களை குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை செய்து வந்த விருதுநகர் மாவட்டம், வீரசோழர் கிராமத்தை சேர்ந்த ரஷீது அகமது (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட ரஷீது அகமது, அன்னை சத்யா பஜார் மற்றும் பர்மா பஜாரில் செல்போன் கடை வைத்திருந்து, திருட்டு செல்போன்களை வாங்கி வந்ததும், பின்னர் மண்ணடி, அங்கப்ப நாயக்கன் தெருவிலுள்ள ஒரு லாட்ஜில் தங்கி ரகசியமாக திருட்டு செல்போன்களை விற்று வந்ததும் தெரியவந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்