SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேளிக்கை நிகழ்ச்சி என நாடகம் பெண் வேடத்தில் வந்த வாலிபருக்கு அடி உதை

2018-12-09@ 01:02:05

சென்னை: பெண் வேடமிட்டு வந்த வாலிபர் ஆபாசமாக பேசியதால் பொதுமக்களிடம் சிக்கி அடிஉதை வாங்கினார். வேளச்சேரி தண்டீஸ்வரம் நகர் மார்க்கெட் அருகில் நேற்று மாலை, கருப்பு நிற பர்தா  அணிந்து வந்த பெண் அந்த பகுதி இளைஞர்களிடம் பேச்சுக்கொடுத்துள்ளார். அப்போது இளைஞர்களிடம் அருவருக்கத்தக்க கேள்வி கேட்டுள்ளார். அந்த பெண்ணின் குரலிலும் மாற்றம் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி இளைஞர்கள் பர்தாவை விலக்கியபோது பேச்சு கொடுத்தவர் பெண் அல்ல என்பதும், ஒரு ‘வாலிபர்’ என்பதும் தெரிந்தது. உடனே ஆத்திரம் அடைந்த அவர்கள் அந்த வாலிபருக்கு தர்மஅடி கொடுத்தனர்.

தகவலறிந்து வேளச்சேரி ரோந்து போலீசார் விரைந்து வந்து பலத்த காயமடைந்த வாலிபரை மீட்டு, அதே பகுதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். போலீஸ் விசாரணையில் கோடம்பாக்கம் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் இன்ஜினியர் சங்கர் (25) என்பதும், ஒரு கேளிக்கை நிகழ்ச்சிக்கு பெண் வேடத்தில் வந்ததும் தெரிய வந்தது. மேலும், விசாரணையில் பர்தா அணிந்து சென்று ஆண்களிடம் பேச்சு கொடுத்து அவர்கள் ஆண் என்று கண்டுபிடித்தால் அவர்களுக்கு  பரிசு வழங்குவது போன்ற  நிகழ்ச்சியை நடத்துவதற்காக இங்கு வந்ததாக கூறியுள்ளார். ஆனாலும் அவருடன் கேமராமேன், நண்பர்கள் யாருமே உடன் இல்லாததாலும், மன நலம் பாதித்தவர் போன்று பேசியதாலும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்