SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெலங்கானா தேர்தல் பணிக்கு சென்று திரும்பிய ஊர்க்காவல் படை திடீர் ஆர்ப்பாட்டம்

2018-12-09@ 01:01:10

சென்னை: தெலங்கானா தேர்தல் பணிக்கு சென்றுவந்த ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்கள் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறைக்கு சேவையாற்ற நினைக்கும் இளைஞர்களை ஊர்க்காவல் படை என்ற பெயரில் தனியாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு பாதுகாப்பு பணி, பேரிடர் காலம், கலவரம் ஏற்படும் பகுதி, தேர்தல் பாதுகாப்பு பணிகளில் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்களுக்கும் போலீசார் போன்று சீருடை, பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தெலங்கானாவில் நடந்த சட்டசபை தேர்தல் பணிக்கு சென்ற 2500 ஊர்க்காவல் படையினர் நேற்று சென்னை திரும்பினர். அப்போது அவர்கள் திடீரென்று எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் திரண்டு தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், தெலங்கானா சட்டசபை தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு சென்ற போது எங்களுக்கு எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை, நல்ல சாப்பாடு, தங்குமிடம் எதுவும் இல்லை. எந்த  கோரிக்கை வைத்தாலும் கண்டுகொள்வதில்லை. நாங்கள் போலீசாருக்கு இணையாக உயிரைக் கொடுத்து வேலை செய்கிறோம்.  ஆனால் மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. . எங்களுக்கு மாதம் ரூ.16 ஆயிரம், மாதம் முழுவதும் பணி வழங்க வேண்டும். என்று கூறினர். அதிகாரியிடம் கேட்ட போது காவல் துறையினருக்கு வழங்கப்படும் நிதியில் இருந்துதான், ஊர்க் காவல்படையில் இருப்பவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும். பணிபுரிந்த வீரர்களுக்கு ஊக்கத் தொகையில் ஏற்கனவே பாக்கி உள்ளது. ஊர்க்காவல் படையினருக்கு கொடுப்பதற்கு போதிய நிதி இல்லாததால், அவர்களுக்கு பணி ஒதுக்குவதையும் குறைத்து விட்டோம். ஒருசில வீரர்கள் காவல் நிலைய அதிகாரிகளுடன் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • CanadaSyrianChildren

  கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

 • DroneLanternChina

  ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

 • AttukalPongalaKerala

  ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

 • mahipoornima

  கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

 • AeroShowBangalore19

  பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்