SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலைவர் மாறுவது சாத்தியமா? தங்கம் விலை ஒரே நாளில் கிடுகிடு சவரனுக்கு 360 உயர்வு

2018-12-09@ 01:00:19

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு 360 உயர்ந்தது. இதன் மூலம் மீண்டும் தங்கம் 24 ஆயிரத்தை தாண்டியது. இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். தங்கம் விலையில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஏற்றம், இறக்கம் நிலை காணப்பட்டு வந்தது. சில நேரங்களில் அதிகப்படியாக விலையும் உயர்ந்தும் வந்தது. இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அதாவது 1ம் தேதி ஒரு சவரன் தங்கம் 23,240, 3ம் தேதி 23,440, 4ம் தேதி 23,624 என்றும் தங்கம் விற்பனையானது. கடந்த 5ம் தேதி சற்று தங்கம் விலை குறைந்து ஒரு சவரன் 23,592, 6ம் தேதி 23,760க்கும் விற்பனையானது. மறுபடியும் நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று குறைந்து ஒரு கிராம் 2,965க்கும், சவரன் 23,720க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது.அதாவது, கிராமுக்கு 45 உயர்ந்து ஒரு கிராம் 3010க்கும், சவரனுக்கு 360 உயர்ந்து ஒரு சவரன் 24,080க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை ஒரே நாளில் கிடுகிடுவென சவரனுக்கு 360 உயர்ந்தது நகை வாங்குவோரை கலக்கம் அடைய செய்துள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை சவரன் 24 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தையும் தொட்டுள்ளது.

வருகிற நாட்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, ெபாங்கல் என்று வரிசையாக பண்டிகை வருகிறது. அதிக சுபமுகூர்த்த தினங்களும் வருகின்றன. இந்த நேரத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதனால் இந்த நேரங்களில் நகை வாங்குவோம் என்று நினைத்து இருப்பவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வருகின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை நாளாகும். அதனால், நேற்றைய விலையிலேயே தங்கம் விற்பனையாகும். மீண்டும் நாளை மார்க்கெட் தொடங்கியதும் தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரிய வரும். இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது:

அமெரிக்காவின் உற்பத்தி குறையீடு எண் சரிந்துள்ளது. இதனால், பெரும்பாலானவர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதன் தாக்கத்தின் காரணமாக உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அது மட்டுமில்லாமல் நேற்று முன்தினம் நடந்த எண்ெணய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பில் எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா  நிர்ப்பந்தித்துள்ளது. எண்ெணய் உற்பத்தியை குறைக்கும் பட்சத்தில் இந்தியா எண்ணெயை அமெரிக்க டாலரில் தான் வாங்க வேண்டும். இதனால், இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் சரியும். இது போன்ற காரணங்களால் தான் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இன்னும் விலை உயர தான் வாய்ப்புள்ளது. அதாவது, வரும் நாட்களில் சவரனுக்கு 200லிருந்து 300 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்