SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேசை முடிக்க புது டெக்னிக்

2018-12-09@ 00:49:53

குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் 30 வயது இளம்ெபண் தனது செயினை வாலிபர் ஒருவர் பறித்து சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வீட்டில் குடிக்க தண்ணீர் கேட்டு  குடிப்பது போல் நடித்து அந்த வாலிபர் நகையை பறித்து சென்றதாகவும் கூறியிருந்தார். ஆனால், திருடியது பெண்ணுக்கு ஏற்கனவே நன்கு பரிச்சயமான நபர்தான் என்பது போலீசாரின் அதிரடி  விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 5 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் நான்கு பேரை காவல் நிலையம் கொண்டு வந்தனர். அதில் ஒரு வாலிபர் மீது ஏற்கனவே  வழக்குகள் உள்ளன. அதனால் விசாரணைக்கு வந்தபோது போலீசார் புகைப்படம் எடுத்து வைத்திருந்தனர். போட்டோவில் இருந்த நபரை அந்த பெண்ணிடம் அடையாளம் காட்ட, அவர் திருட்டில்  ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. அவர் பறித்த நகையை ₹63 ஆயிரத்திற்கு அந்த பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து 3 நண்பர்களுடன் பங்கு போட்ட தகவலும் தெரியவந்தது. பின்னர் நிதி நிறுவனத்திற்கு  சென்று நகையை மீட்டு பெண்ணிடம் போலீசார் ஒப்படைத்தனர். அதற்கான தொகையை நிதி நிறுவனத்திடம் 4 வாலிபர்களும் சேர்ந்து வழங்கவும், தங்களுக்கும் ஒரு தொகையை தர வேண்டும்  என்று கட்டப்பஞ்சாயத்து செய்து 4 பேரிடமும் தனித்தனியே பெருமளவு தொகையை போலீஸ் அதிகாரி கறந்துவிட்டு, அவர்களை ராஜமரியாதையுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டாராம்.  பெண்ணின் புகாருக்கு ரசீது போட்டு கொடுத்ததுடன் வழக்குபதிவு இல்லாமல், கையும் கையுமாக வழக்கை அதிகாரி முடித்த வித்தையை பற்றித்தான் கருங்கல் பகுதி பொதுமக்கள் இப்போது  பரபரப்பாக பேசி வருகின்றனர்.

பெண் போலீசார் டிரஸ் ஜொள்ளு விடும் டிஎஸ்பி
வேலூர் ஆயுதப்படையில் முழுமுதற் கடவுள் பெயர் கொண்டவர் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார். இவர் வந்து சில மாதங்கள் அமைதியாகவும், தான் உண்டு தன் வேலை உண்டு என்றும்  இருந்து வந்தார். தற்போது பதுங்கிய புலி தனது வேலையை காட்டி விட்டது என்ற கதையாக அவரின் ஆட்டம் வேறு விதமாக மாறி உள்ளது. அதாவது பெண் போலீசாரை பார்த்து ஜொள்ளு விடுவதுடன், அவர்களை வேறுவிதமாக கையாளவும் தொடங்கியுள்ளாராம்.சீருடையில் உள்ள பெண் போலீசார் மாற்று உடையில் டிசர்ட் மற்றும் கால்சட்டையுடன் வந்தால் அவர்களை ஆண் மற்றும் மற்ற பெண் போலீசாரின் முன்னிலையில் கவிதை நடையில் அவர்களது  ஆடையை வர்ணிக்கும் வேலையில் இறங்கி விடுகிறாராம். ‘இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது. இதையே நீ போட்டு வந்தால் நான் சந்தோஷப்படுவேன்’ என்று வழிகிறாராம். குறிப்பாக  இளமையான பெண் போலீசாரை பார்த்தால் அவர்களை இரட்டை அர்த்தத்தில் அரட்டை அடித்து கேலி செய்தும் வருகிறாராம். பெண் ேபாலீசார் அனுசரித்து போகவில்லை என்றால் அவர்களுக்கு பல  கிலோமீட்டர் தொலைவுக்கு டூட்டி போடுவதும், தனக்கு வேண்டப்பட்டவர்களை மட்டும் அருகிலேயே டூட்டி போடுவதும் தொடர்கதையாக உள்ளதாக மனம் குமுறுகின்றனர் பெண் போலீசார்.  இதுதொடர்பான புகார்களை உயரதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார்களாம்.

செல்போன்களை கண்காணிக்கும் நெல்லை போலீஸ்
நெல்லை மாவட்டத்தில் ஜாங்கிட், கண்ணப்பன், ஆஸ்ராகார்க் போன்ற போலீஸ் உயர் அதிகாரிகள் பணியாற்றிய போது செய்தியாளர்களை அடிக்கடி சந்தித்து தகவல்களை பறிமாறிக் கொள்வர்.  எந்தத் தகவல் என்றாலும் பகிர்ந்து கொள்வதுண்டு. இதன் மூலம் போலீசார் கோட்டை விட்ட வழக்குகளில் கூட துப்பு கிடைக்கும். பொதுமக்களும் எளிதில் தொடர்பு கொண்டு குற்றச் செயல்கள்  நடக்கும் முன்பே போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிப்பர். ஆனால் நெல்லை மாவட்டத்தின் தற்போதைய போலீஸ் அதிகாரிகள் பெரும்பாலும் செய்தியாளர்கள், பொதுமக்கள் யாருடனும் அதிக  தொடர்பு வைத்துக் கொள்வதில்லை. ஏதாவது கிரைம் சம்பந்தப்பட்ட செய்திகள் என்றாலும் அப்படியே மறைத்து விடுவதில் தான் குறியாக இருக்கிறார்கள். ஆப்த ரெக்கார்டு என்று கூட நிறைய  தகவல்களை போலீஸ் உயர் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்வர். இதன் மூலம் தவறுகளை சுட்டிக்காட்டினால், அதில் உண்மை இருந்தால் கோபப்படுவதில்லை. இதற்காக எஸ்ஐ அளவில்  பத்திரிகை செய்தி தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இப்போது செய்தி தொடர்பாளர்களும் கிடையாது. பிரஸ்மீட்டும் கிடையாது. உளவுப்பிரிவினர் யாராவது  நிருபர்களிடம் பேசினால் அவர்களது ெசல்போன்கள் கண்காணிக்கப்படுகின்றன. நிருபர்கள் மற்றும் ஒரு சில காவலர்களின் செல்போன்களை கண்காணிக்கவும் உயர் அதிகாரி ஒருவர்  உத்தரவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ChennaiMarinaMaasiMagam

  மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

 • AlbinoTurtleheart

  உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

 • ModiSalmanDelhi

  சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

 • SuperSnowMoon2k19

  அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

 • 20-02-2019

  20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்