SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும்

2018-12-09@ 00:29:32

* மத்திய நீர்வள ஆணைய தலைவராகவும் நீடிப்பதால்
* மசூத் உசேனை நீக்க சுப்ரீம் ேகார்ட்டில் தமிழக அரசு மனு

புதுடெல்லி: மத்திய நீர்வள ஆணையம், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகிய இரண்டுக்கும் ஒரே தலைவராக நீடிக்கும் மசூத் உசேனை நீக்கி விட்டு காவிரி ஆணையத்திற்கு என முழு நேரம் பணியாற்றும் வகையில் புதிய தலைவரை உடனே நியமிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகா, புதுவை மற்றும் கேரளா ஆகிய நான்கு மாநிலங்களின் நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்கும் விதமாக புதிய ஒரு செயல் திட்டத்தை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்து அரசிதழில் வெளியிட்டது. இதில் முதலாவதாக ஆணையத்தின் தற்காலிக தலைவராக யுபி.சிங் நியமிக்கப்பட்டாலும், பின்னர் காவிரி ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் தமிழகம் உட்பட நான்கு மாநிலத்தின் 9 பேர் கொண்ட உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு மத்திய நீர்வளத்துறை ஒப்புதல் வழங்கியதற்கு கடந்த 3ம் தேதி நடந்த ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த பின்னர் பேசிய மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன், தமிழகத்தின் முழு ஒப்புதல் இல்லாமல் மேகதாது பகுதியில் புதிய அணை எதையும் கர்நாடகா அரசு கட்ட முடியாது. மேலும் இதில் மத்திய நீர்வளத்துறை ஒப்புதல் வழங்கியிருந்தாலும் ஆணையத்தின் அனுமதி கட்டாயம் வேண்டும். என தெரிவித்திருந்தார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் முதலாவதாக மத்திய நீர்வளத்துறை ஒப்புதலை ரத்து செய்யக்கோரியும், அடுத்ததாக கர்நாடகா அரசு, மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் உட்பட 5 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தது. இதையடுத்து தமிழக அரசின் மனுவை வரும் வாரம் விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.  இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும். ஆணையத்தின் இடைக்கால தலைவராக இருக்கும் மசூத் உசேன் மாநில வாரியாக ஒருவருக்கொருவர் பாரபட்சம் காட்டி செயல்பட்டு வருகிறார்.

மேலும் மசூத் உசேன் இரட் டைப் பதவி வகிப்பதால் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு என முழுநேர நிரந்தர தலைவரை நியமிக்க மத்திய நீர்வளத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.குறிப்பாக மசூத் உசேனை தலைவராகக் கொண்ட மத்திய நீர்வள ஆணையம் தான் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால் அதேபோன்று அவரது தலைமையில் இயங்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணையமோ மேகதாதுவில் தமிழக அரசு அனுமதியில்லாமல் அணையை கட்ட அனுமதிக்க மாட்டோம். அது சாத்தியமும் கிடையாது எனக்கூறுகிறது.  இவ்வாறு ஒரே தலைவரின்கீழ் இரட்டை நிலைப்பாடு இருந்து வருவதால் அவர் ஆணையத்தின் தலைவராக நீடிப்பது பொருத்தமற்றது ஆகும். அதனால் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு என நிரந்தர தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசால் முன்பு தாக்கல் செய்யப்பட்ட மேற்கண்ட இரண்டு மனுவோடு சேர்த்து ஆணையத்தின் தலைவர் மசூத் உசேனை மாற்ற வேண்டும் என  தாக்கல் செய்துள்ள புதிய மனுவையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க வேண்டும் என நாளை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை வைக்கும் பட்சத்தில் அது குறித்த புதிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கலாம் என தெரிகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக இருக்கும் மசூத் உசேன் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருப்பதால் அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் நான்கு மாநிலங்களையும் ஒருமித்தது தான் ஆணையம். இதில் அனைவரும் சேர்ந்து ஆணையத்தின் தலைவரை மாற்றக் கூறினால் அது குறித்து நீதிமன்றம் பரிசீலனை செய்யும். இதில் மேகதாது பிரச்னையால் மட்டும் ஆணையத்தின் தலைவரை மாற்ற சொல்லும் தமிழக அரசுக்கு மசூத் உசேன் இரட்டை பதவி வகித்து வந்தது இவ்வளவு நாள் தெரியாமலா இருந்தது? என நீதிமன்றம் கேள்வியெழுப்பலாம். அவ்வாறு கேட்கப்படும் பட்சத்தில் அது மீண்டும் புதிய சிக்கலை உருவாக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை. இதில் தமிழகத்தின் கோரிக்கைக்கு புதுவை அரசு மட்டுமே தற்போது வரை ஆதரவாக உள்ளது. கேரள மாநிலம் யாருக்கு ஆதரவளிக்கும் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்