SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொழில் செய்வதாக 2 கோடி மோசடி: 2 பேர் கைது

2018-12-09@ 00:20:10

சென்னை: தொழில் செய்வதாக கூறி ₹2 கோடி ஏமாற்றிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் ‘‘அம்பத்தூரை சேர்ந்த ராட்ஜன் மற்றும்  தெய்வஜோதி ஆகியோர் கடந்த 2014ம் ஆண்டு என்னிடம் வந்து தொழில் செய்யப்போவதாகவும். அதற்கு முதலீடு செய்யகோரியும் வற்புறுத்தினர். மேலும் அதில் வரும் லாபத்தில் பங்கு  கொடுத்துவிடுவதாகவும் கூறினர். இதனை நம்பி நான் ₹ 2 கோடியே 28 லட்சம் 9 ஆயிரம் முதலீடு செய்தேன். ஆனால் இருவரும் ஏமாற்றிவிட்டனர்’’ என்று கூறியிருந்தார்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ராட்ஜனை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோல், சூளைமேடு பகுதியில் அரிசி  கடைநடத்தி வரும்  சினீவாசன் சென்னை, மத்திய குற்றபிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். வேலூரை சேர்ந்த கனகராஜ் என்பவர், எனது கடையில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில்  இவர் தனது நண்பர்களை என்னிடம் அறிமுகம் செய்து பல பொருட்களை வாங்கி சென்றார். ஆனால் அதற்கான பணம் ₹55 லட்சத்தை தராமல் கனகராஜ் ஏமாற்றி விட்டார். என்று கூறியிருந்தார்.  இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicovalcano

    மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

  • modipuja

    உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்