SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக அரசு அறிவித்த சிறைக்கைதிகளுக்கு வாகன பயிற்சி எப்போது?: அறிவிப்போடு நிற்கிறது

2018-12-09@ 00:20:01

வேலூர்: தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் கைதிகளுக்கு வாகன ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெறும் அறிவிப்பாகவே உள்ளதாக வேதனை குரல்கள்  எழுந்துள்ளன. சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் சிறையில் இருந்து மீண்ட பின்னர் அவர்களின் வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்வதற்காகவும், சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழவும் அவர்களுக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு கைதிகளுக்கான தொழிற்பயிற்சி நிலையமும் தொடங்கப்பட்டுள்ளது.  திருச்சி மத்திய சிறையில் தொடங்கப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் 2 ஆண்டு சான்றிதழ் படிப்புகளில் 180க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். மேலும் கைதிகளின்  உடல்நலனை பேணும் வகையில் உடற்பயிற்சியுடன், நடைபயிற்சியும், ஓட்டப்பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கைதிகளுக்கு வாகன ஓட்டுனர் பயிற்சி வழங்குவதற்கான நடவடிக்கையை சிறைத்துறை நிர்வாகம் மேற்கொண்டது. முதற்கட்டமாக சென்னை புழல் சிறையில் கடந்த ஆண்டு  செப்டம்பர் மாதம் தனியார் நிறுவனத்தின் உதவியோடு ஓட்டுனர் பயிற்சி வழங்குவதை சிறைத்துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 8  மத்திய சிறைகளிலும் கைதிகளுக்கு வாகன ஓட்டுனர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.தமிழகத்தில் சென்னை புழல், புழல்-2, வேலூர், திருச்சி, கோவை, மதுரை, கடலூர், சேலம், பாளையங்கோட்டை என 9 மத்திய சிறைச்சாலைகளில் முதற்கட்டமாக சென்னை புழல் சிறையில்  நன்னடத்தை கைதிகளுக்கு வாகன ஓட்டுனர் பயிற்சி வழங்கப்படுகிறது.

தொடர்ந்து மற்ற 8 மத்திய சிறைகளிலும் இப்பயிற்சியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஒரு நன்னடத்தை கைதிக்கு வாகன ஓட்டுனர் பயிற்சி வழங்க ₹12 ஆயிரம்  செலவாகும். ஆண்டுக்கு 300 பேருக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது இந்த திட்டம் வெறும் அறிவிப்புடன் நிற்கிறது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கைதிகளுக்கு ஓட்டுனர் பயிற்சி வழங்குவதற்கு அப்போதைய சிறைத்துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு ஏற்பாடுகளை செய்தார்.  அவருக்கு பிறகு வந்த அதிகாரிகள் கைதிகளுக்கு வாகன ஓட்டுனர் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. அரசுக்கும், நன்னடத்தை கைதிகளுக்கும் வருவாய் வரும் வகையில் பெட் ேரால் பங்க், பேக்கரி உள்ளிட்ட ெதாழில்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. வாகன ஓட்டுனர் பயிற்சிக்கான செலவினம் அதிகமாக இருப்பதால், குறைந்த கட்டணத்தில் பயிற்சி வழங்க தனியார் நிறுவனங்கள் முன்வரவில்லை. சென்னையில் தனியார் நிறுவனத்தின்  மூலம் சில நாட்களுக்கு மட்டும் கைதிகளுக்கு வாகன ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட்டது.’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்