SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகக்கோப்பை ஹாக்கி போட்டி: 5-1 கணக்கில் கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

2018-12-08@ 20:41:58

புவனேஸ்வர்: உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. உலக கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவின் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இந்திய அணி விளையாடிய 2 லீக் போட்டியில் 1 வெற்றி, 1 டிரா செய்துள்ளது. தென் ஆப்ரிக்காவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. பெல்ஜியத்தை 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இதன் மூலம் 4 புள்ளிகளுடன் சி பிரிவில் முதலிடத்தில் உள்ளது. பெல்ஜியம் அணி 4 புள்ளிகள் பெற்றிருந்தாலும், இந்தியாவை விட கோல் வித்தியாசத்தில் பின்தங்கியிருப்பதால் 2வது இடத்தில் உள்ளது.

இதில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி இன்று இரவு 7 மணிக்கு தொடங்கிய லீக் போட்டியில் கனடாவை எதிர்கொண்டது. போட்டியில் 5-1 என்ற கணக்கில் கனடா அணியை இந்திய அணி வீழ்த்தியுள்ளது. இதனையடுத்து உலக கோப்பை ஹாக்கி தொடரின் கால் இறுதிக்கு இந்திய அணி நேரடியாக முன்னேறியுள்ளது.

கனடாவை பொறுத்த வரையில் பெல்ஜியத்திடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது. தென் ஆப்ரிக்காவை 1-1 என டிரா செய்தது. கடந்த 2013 முதல் தற்போது வரை இந்தியா-கனடா அணிகள் 5 போட்டியில் மோதி உள்ளன. இதில், இந்தியா 3 போட்டியிலும், கனடா ஒரு போட்டியிலும் வென்றுள்ளன. ஒரு போட்டி டிராவானது. தடுப்பாட்டத்தில் பலமிக்க கனடா கடந்த ஆண்டு லண்டனில் நடந்த ஹாக்கி உலக லீக் அரை இறுதி தொடரில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி 5ம் இடம் பெற்றது. அதே போல, ரியோ ஒலிம்பிக் போட்டியில் 2-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை டிரா செய்தது குறிப்பிடத்தக்கது. சொந்த மண்ணில் போட்டி நடப்பதால் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்