SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜஸ்தானில் அதிர்ச்சி: வீதியில் கிடந்த ஓட்டுப்பதிவு இயந்திரம்...2 தேர்தல் அலுவலர்கள் சஸ்பெண்ட்

2018-12-08@ 18:03:14

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்து செல்லும் போது, வீதியில் அப்படியே போட்டுவிட்டு சென்ற 2 தேர்தல் அலுவலர்களை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர். ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில், 199 தொகுதிகளில் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ராம்கர் தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணமடைந்ததால், அங்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மொத்தமுள்ள 4.74 கோடி வாக்காளர்களுக்காக 51,687 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு, 2 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மொத்தமாக 73.85 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது.

இத்தேர்தலில் 2,274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலத்தில் ஆளும் பாஜவுக்கும் காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்நிலையில், பாரன் மாவட்டம் கிஷாங்னி தொகுதியின் ஷஹாபாத் பகுதியில், தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தை, சாலையில் அப்படியே போட்டுவிட்டு அலுவலர்கள் சென்றதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த அதிகாரிகள், அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை கைப்பற்றி, வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைத்தனர். வாக்குப்பதிவு இயந்திரத்தை அலட்சியமாக விட்டுச்சென்ற புகாரில், தேர்தல் அலுவலர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்