SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடகாவிற்கு அணைகட்ட மத்திய அரசு அனுமதி வழங்கினால் இந்திய ஒருமைபாடு என்ற அணை உடையும் : வைகோ

2018-12-08@ 11:09:07

சென்னை: தேர்தலை மனதில் வைத்து கர்நாடகாவிற்கு அணைகட்ட மத்திய அரசு அனுமதி வழங்கினால் இந்திய ஒருமைபாடு என்ற அணை உடையும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை எச்சரித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் டெல்டா மாவட்ட மக்கள் தீரா துயரத்தில் உள்ளதாக குறிப்பிட்டார். இந்த நிலையில் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இப்படியே தொடர்ந்தால் தனித்தமிழ் நாடு என்ற எண்ணம் எதிர்காலத்தில் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்பதும் வைகோவின் கருத்து. சுனாமியை விட பெரிய பாதிப்பை கஜா புயல் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட வைகோ விவசாயிகளுக்கு இழப்பீட்டை அதிகரித்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாத சுயமரியாதை இல்லாத அரசாக தமிழக அரசு மாறியிருப்பதாக வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்