SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேச ஒற்றுமையில் வைகோவுக்கு கவலை வேண்டாம் : பிரிவினையை தூண்டுவதாகவும் தமிழிசை கண்டனம்

2018-12-08@ 10:12:49

கோவை: தேச ஒற்றுமையில் மத்திய அரசிற்கு அதிக அக்கறை உள்ளதால் அதை பற்றி வைகோ கவலைப்பட வேண்டாம் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்வதாக வைகோ கூறியுள்ளதற்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். நதிநீர் பங்கீடு பிரச்சினையில் எந்த மாநிலமும் வஞ்சிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு மிக கவனமாக உள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.

எனவே பிரிவினையை பேசி அரசியல் செய்ய முற்பட வேண்டாம் என்று வைகோவை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருவதாக தமிழிசை கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி வலுவான கூட்டணியை அமைத்து எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்ளும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்