SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திய அணி அபார பந்து வீச்சு... 235 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலிய அணி

2018-12-08@ 08:15:48

அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 15 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை இந்திய அணி தொடங்க உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டின் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. புஜாரா பொறுப்பான சதம் அடிக்க, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 87.5 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில், 2ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ஹேசல்வுட் வீசிய, ஆட்டத்தின் முதல் பந்தில் ஷமி (6) ஆட்டமிழந்தார். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 250 ரன்களுடன் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 88 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களுடன் உள்ளது. ஹெட் 61, ஸ்டார்க் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்நிலையில் 3-ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய போது ஸ்டார்க் 15 ரன்கள் எடுத்த போது பூம்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி பந்து வீச்சில் அஸ்வின், பூம்ரா, தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த், ஷமி தலா விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 15 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்