SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் : 3-ம் நாள் ஆட்டம் பாதிப்பு

2018-12-08@ 07:23:40

அடிலெய்டு: இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டின் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. புஜாரா பொறுப்பான சதம் அடிக்க, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 87.5 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில், 2ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ஹேசல்வுட் வீசிய, ஆட்டத்தின் முதல் பந்தில் ஷமி (6) ஆட்டமிழந்தார். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 250 ரன்களுடன் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 88 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களுடன் உள்ளது. ஹெட் 61, ஸ்டார்க் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்நிலையில் 3-ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய போது ஸ்டார்க் 15 ரன்கள் எடுத்த போது பூம்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicovalcano

    மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

  • modipuja

    உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்