SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்கு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

2018-12-08@ 03:48:17

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப் பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இலங்கையில் கடந்த அக்டோபர் 26ம் தேதி முதல் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இலங்கை அதிபர் சிறிசேனா, அந்நாட்டின் பிரதமராக இருந்த விக்ரமசிங்கேவை டிஸ்மிஸ் செய்துவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமர் பதவியில் அமர்த்தினர். அவரது முடிவுக்கு தமிழ் கூட்டணி கட்சி எம்பிக்கள் முதல் பெரும்பாலானவர்களின் ஆதரவு கிடைக்காததால், 20 மாதம் முன்னதாகவே நாடாளுமன்றத்தை கலைத்து சிறிசேனா உத்தரவிட்டார். அதோடு, புதிதாக தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டார்.

ஆனால், அவரது முடிவை ஏற்க மறுத்த எதிர்கட்சிகள் மற்றும் சமூகு நல அமைப்புகள் ஒன்று திரண்டு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து,  சிறிசேனாவின் முடிவை ஆய்வு செய்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், தேர்தல் நடைமுறைகளை மேற்கொள்ள தடை விதித்ததோடு, நாடாளுமன்றத்தை கலைத்த அதிபரின் முடிவுக்கும் தடை உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, அதிபரின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 13 மனுக்களை ஒன்றான இணைத்து தலைமை நீதிபதி நலின் பெரைரா தலைமையிலான 7 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி வந்தது.

இருதரப்பு விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். நாடாளுமன்றத்தை கலைக்கும் சிறிசேனாவின் முடிவின் மீதான தீர்ப்பு வரும் வரை, ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவையும் நீட்டித்து உத்தரவிட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicovalcano

    மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

  • modipuja

    உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்