SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரிவார்டு பாயின்ட்: பரிசா? புலி வாலா?

2018-12-08@ 02:32:45

பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை கிடுகிடுவென உயர்ந்து விட்டது. பணத்தட்டுப்பாடு தீர்ந்த பிறகும் உயர்வது ஏன்? காரணம் பரிசு மழைதான். மத்திய அரசு யுபிஐ பரிவர்த்தனை தொடங்கிய பிறகு அதை ஊக்குவிக்க ஊக்கப்பரிசுகளை அறிவித்தது. அதேபோலத்தான் டிஜிட்டல் பரிவர்த்தனை அளிக்கும் நிறுவனங்கள், வங்கிகள் கேஷ் பேக், ரிவார்டு பாயின்ட்களை அளிக்கின்றன.

கேஷ்பேக் என்பது, தள்ளுபடி போன்றது. முன்பே தீர்மானிக்கப்படுகிறது. பரிவர்த்தனை செய்யும்போதே அந்த பணம் கழித்துக்கொள்ளப்படுகிறது. ஏறக்குறையய தள்ளுபடிக்கு பதிலாக அளிக்கும் கவர்ச்சித்திட்டம் இது.

 ரிவார்டு அப்படி அல்ல பரிவர்த்தனை தொகை, எதற்காக செலுத்தப்படுகிறது என்பதை பொறுத்து அமைகிறது. செலவழிப்பதற்கு ஏற்ப இது பாயின்ட்களாக சேரும்.

இப்படி சேரும் ரிவார்டுகளை குறிப்பிட்ட காலத்துக்குள் பரிவர்த்தனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், திடீரென ஒரு நாள் வாலட்டில் இருந்து காணாமல் போய்விடும். இப்படி காலக்கெடு இருந்தால் ரிவார்ட் பாயின்ட் பக்கம் போகவே கூடாது.

சில ரிவார்ட் பாயின்ட்கள், வாடிக்கையாளர் விவரம் தொடர்பான கேஒய்சியில் கூடுதல் தகவல் கொடுத்தால் அள்ளித்தருவார்கள். இங்கேதான் உங்கள் தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் அதிகம். சம்பந்தம் இல்லாத தகவல் கேட்டால் உஷார் ஆகிவிட வேண்டும்.

ரிவார்ட் பாயின்ட்கள் செலவு செய்வதற்கு ஏற்ப சேரும். அதை பணமாக மாற்ற இன்னும் அதிகம் செலவு செய்ய வேண்டி வரலாம். எனவே ரிவார்ட் பாயின்ட்டுக்கு ஆசைப்பட்டு செலவை அதிகரித்துக் கொண்டே போகவேண்டி வரும். பிறகு, புலிவால் பிடித்த கதைதான்.

ரிவார்ட் பாயின்ட்டுக்கு ஆசைப்படுவதற்கு முன்பு விதிகளை புரிந்து கொள்ள வேண்டும். சில பாயின்ட்கள் சில ஓட்டல்கள், சில ஆப்ஸ்கள் மூலமான பரிவர்த்தனைக்கு மட்டும் செல்லுபடியாகும். இது உங்களுக்கு பயன்படாமல் கூட போகலாம்.

 உங்களிடம் ₹3000க்கு கூட பாயின்ட் இருக்கலாம். ஆனால், அதில் ஒரு ஓட்டலில் அறை முன்பதிவு செய்ய ₹4000 செலுத்த வேண்டிய வந்தால், இந்த ரிவார்ட் பாயின்ட்டில் ₹500தான் கழியும் என்பார்கள். பிறகு, எஞ்சிய பாயின்ட்களை மாற்ற எவ்வளவு ஆயிரம் செலவி வேண்டிவரும் என்பதை யோசிக்கவேண்டும். எனவே, பாயின்ட் அல்லது கேஷ்பேக்கிற்கு ஆசைப்பட்டு செலவை இழுத்துவிடாதீர்கள். வலையில் விழுந்து விடாதீர்கள். உஷாராக இருந்தால் பரிசு. இல்லாவிட்டால் படிப்பினைதான் என்கிறார்கள் அனுபவப்பட்டவர்கள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • CanadaSyrianChildren

  கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

 • DroneLanternChina

  ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

 • AttukalPongalaKerala

  ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

 • mahipoornima

  கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

 • AeroShowBangalore19

  பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்