SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலைக்கு ஆள் எடுக்க மிக கடினமான தேர்வுகள் : கல்லூரிகளில்‘டென்ட் அடிக்கும்’ சிறு நிறுவனங்கள்

2018-12-08@ 02:30:45

புதுடெல்லி,: முன்பெல்லாம் கல்லூரிகளில் வளாக நேர்முகத்தேர்வு (கேம்பஸ் இன்டர்வியூ) நடத்துவது பெரிய நிறுவனங்களாகத்தான் இருக்கும். திறமையானவர்களை கொத்திக்கொண்டு போய்விடுவார்கள். படிப்பு முடியும் முன்பே வேலை நிச்சயம் ஆகிவிடும். இப்போது, இதில் சிறு, நடுத்தர நிறுவனங்களும் களமிறங்கி விட்டன என சர்வே ஒன்று தெரிவிக்கிறது.புதிது புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முளைத்து வருகின்றன. டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் இவற்றின் பங்கு முக்கியம். இவை உட்பட பெரிய, சிறிய, நடுத்தர நிறுவனங்களில் தனியார் அமைப்பு ஒன்று சர்வே நடத்தியது. வேலைக்கு ஆள் தேர்வு செய்வது எப்படி என்பது பற்றிய சர்வே இது.  பெரிய நிறுவனங்கள் திறமையானவர்களை தேர்வு செய்ய கடினமான தேர்வுகளை நடத்தி முடிவு செய்யும். இதுபோன்ற சலாவான தேர்வுகளை இத்தகைய சிறு, நடுத்தர நிறுவனங்களும் வைக்க ஆரம்பித்து விட்டன.
 இயந்திரமயமாகி வருவதால், ஸ்மார்ட் தொழிற்சாலைகளும் உருவாகி வருகின்றன. இவற்றில் 70 சதவீதம் ஸ்மார்ட் இயந்திரங்கள் மூலம்தான் செயல்படும். இவற்றை உருவாக்க செயற்கை நுண்ணறிவு அவசியம். இதுபோல் இணைய உலகில் அறிவாற்றல் உள்ளவர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த நிறுவனங்களின் டிஜிட்டல் மய இலக்கை எட்ட கல்லூரி மாணவர்களுக்கு சலால் மிகுந்த தேர்வுகளை வைக்கின்றன. சில சிறிய நிறுவனங்கள். பெரிய நிறுவனங்களை விட 50 சதவீதம் கூடுதலாக சம்பள ஆபர் வழங்குகின்றன. திறன் தேர்வுகளை நடத்தி வேலைக்கு ஆள்தேர்வு செய்வது பெரிய நிறுவனங்கள் 11 சதவீதமாகவும், சிறு, நடுத்தர நிறுவனங்கள் 23 சதவீதமாகவும் உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • malar_modi12

    2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

  • peruearthqq1

    பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

  • 20aacident_died11

    சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்