SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கஜா புயலால் பாதிப்பு : அரிசி விலை உயர வாய்ப்பு

2018-12-08@ 02:29:40

காரைக்குடி: கஜா புயல் பாதிப்பால் அரிசி விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயல், பள்ளத்தூரில் 200க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் உள்ளன. பெரும்பாலும் திருச்சி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, அரியலூர், மதுரை திருவாடானை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் போன்ற ஊர்களில் இருந்துதான் இந்த ஆலைகளுக்கு நெல் வரத்து இருக்கும். இந்த ஆண்டு ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் நெல் வருகிறது.

கடந்த வாரம் வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தில் தஞ்சை, நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகள் பலத்த சேதமடைந்தன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இனி வரும் மாதங்களில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பழைய நிலைமைக்கு வந்தபிறகுதான் நெல் அறுவடை குறித்து தெரிய வரும்.

கடந்த ஆண்டு 62 கிலோ எடை கொண்ட டீலக்ஸ் பொன்னி புதுரக நெல் மூட்டை ₹1,400க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இந்தாண்டு டீலக்ஸ் பொன்னி புதுரக நெல் மூட்டை ₹1,500 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. பழைய ரக டீலக்ஸ் பொன்னி, கடந்த ஆண்டு ஒரு மூட்டை ₹1,500க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ₹1,750க்கு கொள்முதல் செய்யப்படுகிறது கடந்த ஆண்டு தினமும் 300 முதல் 400 லாரிகள் வரை நெல் வரத்து இருக்கும். இந்தாண்டு நாள் ஒன்றுக்கு 30 முதல் 50 லாரிகள் வரை மட்டுமே வரத்து உள்ளது.

இதுகுறித்து அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு இதே மாதத்தில் டீலக்ஸ் பொன்னி கிலோ ₹42க்கு (புதிய ரகம்) விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது கிலோ ₹45 என (உள்ளூர் மில் விலை) விற்பனை ஆகிறது. 100 கிலோ கொண்ட மூட்டை ₹3,900 முதல் ₹4,300 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை அடுத்தடுத்த மாதங்களில் வரத்துக்கு தகுந்தார்போல் மாறும் என்பதால், விலை உயர வாய்ப்புண்டு. கஜா புயலால் ஏராளமான ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
இதனால் வரும் நாட்களில் அரிசி விலை உயரவே வாய்ப்புண்டு. நெல் வரத்து அதிகமானால் அரிசி விலை குறையலாம். தற்போது பாதி ஆலைகள் சரிவர இயங்காமல் உள்ளதால், அரிசி விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. மேலும் ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் விளைச்சல் அதிகம் உள்ளதால், அரிசி வியாபாரிகள் அம்மாநில அரிசியை அதிக விலைக்கு வாங்குகின்றனர். இதனால் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளது என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicovalcano

    மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

  • modipuja

    உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்