SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒப்பந்தக்காரரிடம் ரூ.18,000 லஞ்சம் உதவி செயற்பொறியாளர் கைது

2018-12-08@ 01:44:05

அரியலூர்,:  ஒப்பந்தத்தொகையை தருவதற்காக, பாசனதாரர்கள் சங்க தலைவரிடம்,  ரூ.18 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளரை, போலீசார் கைது செய்தனர்.அரியலூர் மாவட்டம், பெரிய ஏரி பாசனதாரர் சங்கத்தலைவர் தமிழ்வேல்.. இவர், ஏரியை தூர்வாருதல், வரத்து வாய்க்கால் சீரமைத்தல் போன்ற பணிகளை காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்யும் ஒப்பந்தகாரர்.  காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்ததில்  தனக்கு வர வேண்டிய, ஒப்பந்தக் தொகையை பெற, பொதுப்பணித் துறையின் மருதையாறு வடிநில கோட்ட நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் மணிமாறனை அணுகினார்.  அப்போது  அவர் ஒப்பந்ததொகையை பெறுவதற்கு ரூ. 18 ஆயிரம்  லஞ்சமாக தருமாறு  தமிழ்வேலிடம் கேட்டார். லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் இது குறித்து, அரியலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.  அவர்கள் அறிவுறுத்தலின்பேரில் ரசாயனம் தடவி  ரூ.18 ஆயிரத்தை தமிழ்வேல், மணிமாறனிடம் லஞ்சமாக கொடுத்தார். அப்போது போலீசார் உதவி செயற்பொறியாளர் மணிமாறன், அலுவலக டிரைவர் சக்திவேல் ஆகிய இருவரையும்  கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicovalcano

    மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

  • modipuja

    உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்