SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவையில் சி.பி.ஐ. அதிகாரியாக நடித்த பெயிண்டர் சிக்கினார்

2018-12-08@ 01:43:09

கோவை: கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள திருப்பல்லூரை சேர்ந்தவர் கிரிஷ் (32). இவர், கடந்த 2 ஆண்டிற்கு முன் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். அப்போது ஆம்பூரை சேர்ந்த அன்னலட்சுமி (26) என்பருடன் பழக்கம் ஏற்பட்டது. அன்னலட்சுமிக்கு திருமணமாகி 3 குழந்தை உள்ளன. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வசித்து வந்தார். மேலும் அன்னலட்சுமியிடம் தன்னை சி.பி.ஐ. அதிகாரி கூறியுள்ளார். இதனால், நெருக்கம் அதிகமானது. நாளடைவில் திருமணம் செய்து கொள்வதாகவும், குழந்தைகளை கவனித்து கொள்வதாகவும் கூறிய கிரிஷ், அன்னலட்சுமியையும், குழந்தைகளையும் கோவைக்கு அழைத்து வந்தார். கோவை குனியமுத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். வேலைக்கு செல்லாமல் கிரிஷ் ஜாலியாக சுற்றியதால் அன்னலட்சுமிக்கு சந்ேதகம் ஏற்பட்டது. இதுபற்றி கேட்டதும் கடந்த சில நாளுக்கு முன் மாயமானார்.   இதுதொடர்பாக அன்னலட்சுமி, குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். அதில் கிரீஷ் சி.பி.ஐ அதிகாரி என ஏமாற்றியதாகவும், போலியாக அடையாள அட்டை தயாரித்து சிலரிடம் பணம் வாங்கி மோசடி ெசய்துள்ளார் எனவும் கூறினார். இதனால், மோசடி, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு ெசய்து கிரிசை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி சிபிஐ அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த அடையாள அட்டையில் ராஜாகிரி என்ற பெயரும், போட்டோவும், பேட்ச் எண், ரத்த வகை பிரிவு, செல்போன் எண் இடம் பெற்றுள்ளது. சீல் இல்லாமல் இந்த அடையாள அட்டையை தயாரித்துள்ளதும் தெரியவந்தது


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்