SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இம்ரான்கான் குற்றச்சாட்டு பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் பாஜ

2018-12-08@ 01:23:18

இஸ்லாமாபாத்: ‘‘முஸ்லிம்கள், பாகிஸ்தானுக்கு எதிரான அணுகுமுறையை பாஜ பின்பற்றுகிறது’’ என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிக்கைக்கு நேற்று அளித்த பேட்டியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியதாவது: இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்து வருகிறேன். ஆனால், அவற்றை இந்திய ஆட்சியாளர்கள் வெறுத்து ஒதுக்குகின்றனர். முஸ்லிம்களுக்கும், பாகிஸ்தானுக்கும் எதிரான அணுகுமுறையே ஆளும் பாஜ.விடம் உள்ளது; எதிராக செயல்படுகிறது. சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்வதற்காக எல்லை அருகேயுள்ள கர்தார்பூருக்கு விசா இல்லாமல் செல்ல அனுமதி அளித்திருக்கிறேன். இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.  அதற்குப்பின், அமைதி பேச்சுவார்த்தையை  தொடங்க முடியும் என நம்புகிறேன். மும்பை தாக்குதல் வழக்கின் நிலவரத்தை, எனது அரசு அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன். அது தீவிரவாத செயல் என்பதால், அதற்கு விரைவில் தீர்வு காணப்படும்.

வாடகை துப்பாக்கியா? கடந்த 1980ம் ஆண்டு சோவியத் யூனியனுக்கு எதிரான போரிலும், தீவிரவாதத்துக்கு எதிரான தற்போதைய போரிலும் பாகிஸ்தானுக்கு பணம் கொடுக்கப்பட்டது. வாடகை துப்பாக்கி போன்று பாகிஸ்தானை அமெரிக்கா பயன்படுத்தும் உறவை நான் ஒரு போதும் விரும்பவில்லை. இதனால், எங்களுக்கு உயிரிழப்பு, பழங்குடியின பகுதிகள் அழிந்ததோடு மட்டும் அல்லாமல், எங்கள் கவுரவமும் பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவுடன் எங்களுக்கு வர்த்தக உறவு மட்டுமே உள்ளது. இதுபோன்ற உறவைதான் அமெரிக்காவிடமும் நாங்கள் விரும்புகிறோம். பின்லேடனை கொல்லும்போது, கூட்டணியான எங்களை அமெரிக்கா நம்பவில்லை. ஆப்கனில் இருந்து அகதிகள் போர்வையில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் தலிபான்கள் முகாம்களில் தங்கியிருக்கலாம். ஆனால், தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கவில்லை என ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • malar_modi12

  2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

 • peruearthqq1

  பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

 • Trump_japan11

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

 • kashmir_kola11

  தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

 • 20aacident_died11

  சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்