ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழக பந்துவீச்சில் கேரளா தடுமாற்றம்
2018-12-08@ 01:02:21

சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழக அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கேரள அணி தடுமாறுகிறது. சென்னையில் நடக்கும் இப்போட்டியில் முதலில் பேட் செய்த தமிழக அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 249 ரன் எடுத்திருந்தது. ஷாரூக்கான் 82, முகமது 25 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 2ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. சந்தீப் வாரியர் பந்தில் முகமது (29), சாய் கிஷோர் (5) ஆட்டமிழக்க, அடுத்ததாக ஆர்.எஸ்.ஷா, நடராஜன் இருவரும் பசில் தாம்பி பந்தில் டக் அவுட்டாகினர். தமிழகம் முதல் இன்னிங்சில் 268 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷாரூக் கான் 92 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சிறப்பாக பந்துவீசிய சந்தீப் வாரியர் 5, பசில் தாம்பி 4 விக்கெட் கைப்பற்றினர்.
அடுத்து களமிறங்கிய கேரள அணி தமிழக பந்துவீச்சில் தடுமாற்றம் கண்டது. நடராஜன், ஆர்.எஸ்.ஷா அபாரமாக பந்துவீச, கேரள வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினர். அதிகபட்சமாக ராகுல் 59 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் கேரள அணி 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்னுடன் உள்ளது. நடராஜன், ஷா தலா 3 விக்கெட்டும், சாய் கிஷோர் 2, அபராஜித் 1 விக்கெட் கைப்பற்றி உள்ளனர். 3ம் நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.
மேலும் செய்திகள்
லாரெஸ் விருது விழா 2019: இந்தியாவை சேர்ந்த யுவா விளையாட்டு அமைப்பிற்கு நல்லெண்ண விருது
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுமா? : வரும் 27ம் தேதி நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் முடிவு
6 பேர் டக் அவுட் வெறும் 24 ரன்னில் சுருண்டது ஒமான்
மீண்டும் பந்துவீசலாம் தனஞ்ஜெயாவுக்கு ஐசிசி அனுமதி
முதல் ஒருநாள் போட்டியில் இன்று வெஸ்ட் இண்டீசுடன் இங்கிலாந்து மோதல்
ஜோகோவிச்சுக்கு லாரியஸ் விருது
மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்
உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்
அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!
20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்