SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக கோப்பை ஹாக்கி இந்தியா-கனடா இன்று மோதல் : கால் இறுதிக்கு நேரடி தகுதி பெறுமா?

2018-12-08@ 01:02:18

புவனேஸ்வர்: உலக கோப்பை ஹாக்கி தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, கனடாவை எதிர்த்து விளையாடுகிறது. இப்போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில், நேரடியாக கால் இறுதிக்கு முன்னேறலாம். உலக கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவின் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி இன்று நடக்கும் லீக் போட்டியில் கனடாவை எதிர்கொள்கிறது. இந்திய அணி விளையாடிய 2 லீக் போட்டியில் 1 வெற்றி, 1 டிரா செய்துள்ளது. தென் ஆப்ரிக்காவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. பெல்ஜியத்தை 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இதன் மூலம் 4 புள்ளிகளுடன் சி பிரிவில் முதலிடத்தில் உள்ளது. பெல்ஜியம் அணி 4 புள்ளிகள் பெற்றிருந்தாலும், இந்தியாவை விட கோல் வித்தியாசத்தில் பின்தங்கியிருப்பதால் 2வது இடத்தில் உள்ளது.

எனவே, இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவை வீழ்த்தும் பட்சத்தில், சி பிரிவில் முதலிடத்தை தக்க வைத்து, நேரடியாக கால் இறுதிக்கு முன்னேற முடியும். கனடாவை பொறுத்த வரையில் பெல்ஜியத்திடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது. தென் ஆப்ரிக்காவை 1-1 என டிரா செய்தது. சொந்த மண்ணில் போட்டி நடப்பதால் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது. அதே நேரத்தில், கனடாவை எளிதான அணியாகவும் எண்ண முடியாது. கடந்த 2013 முதல் தற்போது வரை இந்தியா-கனடா அணிகள் 5 போட்டியில் மோதி உள்ளன. இதில், இந்தியா 3 போட்டியிலும், கனடா ஒரு போட்டியிலும் வென்றுள்ளன. ஒரு போட்டி டிராவானது. தடுப்பாட்டத்தில் பலமிக்க கனடா கடந்த ஆண்டு லண்டனில் நடந்த ஹாக்கி உலக லீக் அரை இறுதி தொடரில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி 5ம் இடம் பெற்றது. அதே போல, ரியோ ஒலிம்பிக் போட்டியில் 2-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை டிரா செய்தது. எனவே இன்றைய போட்டியில் ஒரு கோல் அடித்தாவது வெற்றி பெற வேண்டுமென எண்ணி இந்திய வீரர்கள் விளையாட வேண்டியது அவசியம். இந்தியா -கனடா போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. மற்றொரு போட்டியில் பெல்ஜியம்- தென்ஆப்ரிக்கா மோதுகின்றது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்