SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பந்துவீச்சில் இந்தியா அசத்தல் அஷ்வின் சுழலில் அடங்கிய ஆஸி.

2018-12-08@ 01:02:17

அடிலெய்டு: அடிலெய்டில் அஷ்வினின் சுழலில்  ஆட்டம் கண்ட ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்னுடன் தடுமாற்றம் கண்டுள்ளது.இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டின் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. புஜாரா பொறுப்பான சதம் அடிக்க, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 87.5 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன் எடுத்திருந்தது. முகமது ஷமி 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில், 2ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது.  ஹேசல்வுட் வீசிய, ஆட்டத்தின் முதல் பந்தில் ஷமி (6) ஆட்டமிழந்தார். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 250 ரன்களுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆரோன் பிஞ்ச், ஹாரிஸ் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இஷாந்த் ஷர்மா வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் பிஞ்ச், ஸ்டெம்புகள் சிதற டக் அவுட் ஆனார்.

அதைத்தொடர்ந்து அஷ்வின் சுழல் ஆஸியை மையம் கொண்டது. ஹாரிஸ் (26), மார்ஷ் (2), கவாஜா (28) என 3 விக்கெட் வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் முன்வரிசை பேட்ஸ்மேன்களை காலி செய்தார். இதில் கவாஜா விக்கெட் அற்புதமாக அமைந்தது. அஷ்வின் வீசிய பந்து கவாஜாவின் கிளவுசை உரசிச் சென்றது. கள நடுவர் அவுட் இல்லை என கூற, கேப்டன் கோஹ்லி உடனடியாக டிஆர்எஸ் முடிவை கோரினார். டிஆர்எஸ்சில் கவாஜா அவுட் என அறிவிக்கப்பட்டது. கவாஜா 125 பந்துகளை சந்தித்து 28 ரன் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதனால், 87 ரன்னில் 4 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா தடுமாற்றம் கண்டது. அஷ்வினுக்கு உறுதுணையாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினர். ஓரளவுக்கு தாக்குபிடித்த ஹேண்ட்ஸ்கோம்ப் (34) மற்றும் கம்மின்ஸ் (10) விக்கெட்டை பூம்ரா வீழ்த்தினார். கேப்டன் பெய்ன் (5) இஷாந்த் வேகத்தில் வெளியேறினார். ஒருமுனையில் ஹெட் மிக நிதானமாக ஆடி அரைசதம் அடித்து, அணிக்கு ஒரே நம்பிக்கையாக உள்ளார்.

2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 88 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களுடன் உள்ளது. ஹெட் 61, ஸ்டார்க் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய பந்து வீச்சில் அஷ்வின் 3, இஷாந்த், பூம்ரா தலா 2 விக்கெட் கைப்பற்றி உள்ளனர். அஷ்வின் 33 ஓவர் வீசி 50 ரன் மட்டுமே கொடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு கைவசம் 3 விக்கெட் மட்டுமே உள்ள நிலையில் 59 ரன் பின்தங்கி உள்ளது. இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்க உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்