SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

16 லட்சம் பணத்தை தின்ற தீர்த்த ஆடு : கோபத்தில் ஆட்டைக்கொன்று சமைத்த குடும்பம்

2018-12-07@ 12:58:36

சர்பியா : மத்திய சர்பியாவில் ஆடு ஒன்று 16 லட்சம் மதிப்பிலான பணத்தை தின்று தீர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய செர்பியாவின் அரன்ஜெலோவாக் அருகே ரனிலோவிக் என்ற கிராமம் ஒன்று உள்ளது. இங்கு சிமிக் இனக் குடும்பம் ஒன்று விவசாயம் செய்து வருகிறது. இந்த விவசாய குடும்பத்தினர் புதிதாக 10 ஹெக்டர் நிலம் வாங்க ரூ.16 லட்சம் மதிப்பிலான பணத்தை வைத்திருந்தனர்.

நிலம் வாங்க வைத்திருந்த பணத்தை மேஜையில் வைத்து விட்டு கதவை மூடாமல் வயலுக்கு சென்று விட்டனர்.இந்த சூழலில் அவர்களது நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று, வீட்டிற்குள் நுழைந்துள்ளது. அங்கு மேஜையில் இருந்த ரூ. 16 லட்சம் மதிப்பிலான பணத்தை கண்டது. கடுமையான பசியில் இருந்த ஆடு, பணக் கட்டுகளை கடித்து தின்று தீர்த்துவிட்டது.

வீடு திரும்பியவர்கள் பணத்தை காணாமல் தேடினர். பணத்தின் எஞ்சிய துண்டுகள் கீழே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வெளியில் வந்து சோதித்த போது, ஆட்டு வாயில் பணத் துகள்கள் மிச்சம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். இதனால் அந்த குடும்பம் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் இருந்தனர். இதனிடையே மொத்த பணத்தையும் தின்று தீர்த்த ஆத்திரத்தில் அந்த ஆட்டை அந்த குடும்பத்தினரே கொன்று சமைத்து சாப்பிட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்