SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர வாய்ப்பு: ஆஸ்திரியாவில் ஒபெக் நாடுகள் கூடி ஆலோசனை

2018-12-07@ 09:40:53

டெல்லி: கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்திருப்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் சவூதி அரேபியா தலைமையிலான ஒபெக் நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பது குறைத்து உறுப்பு நாடுகள் அதிருப்தி தெரிவித்தன. விலையை உயர்த்தும் பொருட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் நாடுகள் ஒருமனதாக தீர்மானித்தன. ஆனால் ஒபெக் கூட்டமைப்பில் இடம்பெறாத ரஷ்யாவின் நிலைப்பாடு என்னவென தெரியவில்லை.

ரஷ்யாவுடன் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பிறகு கச்சா எண்ணெய் உறபத்தியை எவ்வளவு குறைப்பது என்று ஒபெக் நாடுகள் தீர்மானிக்கின்றன. அவ்வாறு நடந்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும். அதற்கேற்பவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிப்பதால் அவற்றின் விலையும் அதிகரிக்கும். 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் விலை குறைக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட எண்ணெய் நிறுவனங்கள் முயற்சிக்கும் என்பதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicovalcano

    மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

  • modipuja

    உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்