SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கை நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம்: ரணில் மீது நம்பிக்கை தீர்மானம்

2018-12-07@ 02:29:12

கொழும்பு: இலங்கை அரசியல் குழப்பத்துக்கு புற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரணில் மீது நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கும் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால், ரணிலை பிரதமர் பதவியில் இருந்து அதிபர் சிறிசேனா நீக்கினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அவர் புதிய பிரதமராக நியமித்தார்.ஆனால், நம்பிக்ைக வாக்கெடுப்பில் அவர் தோற்றார்.  இதையடுத்து, நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்துவிட்டு, ஜனவரி 5ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார். இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

மேலும், ராஜபக்சே பிரதமராக செயல்பட, இலங்கை நீதிமன்றமும் தடை விதத்தது. இதை எதிர்்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில், இலங்கை பிரச் னைக்கு தீர்வு காணும் முயற்சியில் சிறிசேனாவும் ஈடுபட்டுள்ளார் நேற்று முன்தினம் அவர் விடுத்த அறிக்கையில், ‘அரசியல் குழப்பம் இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் நீடிக்காது’ என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற அதிகாரிகள் நேற்று கூறுகையில், ‘‘நாடாளுமன்றம் 12ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் அல்லது மறுநாள் ரணில் மீது நம்பிக்கை  தீர்மானம் தாக்கல் செய்யப்பட  உள்ளது’’ என்றனர். ரணிலுக்கு தமிழ் தேசிய கூட்டணி, ஜேவிபி  ஆகிய கட்சிகளின் துணையுடன் 122 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது. எனவே, அவர் மீண்டும் பிரதமராக தொடர வாய்ப்புள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • malar_modi12

    2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

  • peruearthqq1

    பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

  • 20aacident_died11

    சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்