SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழகம் நிதான துவக்கம்

2018-12-07@ 02:27:33

சென்னை: ரஞ்சி கோப்பை தொடரில், கேரளா அணிக்கு எதிரான பி பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழக அணி நிதான துவக்கம் கண்டுள்ளது.
தமிழகம், கேரளா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை ‘பி’ பிரிவு லீக் சுற்றுப் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பேட் செய்தது. துவக்க வீரர் முகுந்த், முதல் பந்திலேயே டக் அவுட்டானார். அபராஜித் 3, காந்தி 22, தினேஷ் கார்த்திக் 4 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஜெகதீசன் 21 ரன்னில் வெளியேற, 81 ரன்னுக்கு 5 விக்கெட் சரிந்தது.

இக்கட்டான நிலையில் கேப்டன் இந்திரஜித், ஷாரூக்கான் ஜோடி அபாரமாக ஆடி அணியை மீட்டது. இந்திரஜித் 87 ரன் எடுத்து சந்தீப் வாரியார் பந்தில் ஆட்டமிழந்தார். முதல்நாள் ஆட்ட நேர முடிவில் தமிழக அணி 6 விக்கெட் இழப்புக்கு 249 ரன்களுடன் உள்ளது. ஷாரூக்கான் 82, முகமது 25 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்