SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெட்ரோல், டீசல் போல வீட்டுக்கடனும் இனி சந்தையின் கையில்

2018-12-07@ 02:24:53

மும்பை: வீட்டுக்கடன் எவ்வளவு தரலாம் என்று வங்கிகள் இனி முடிவு செய்யாது; சந்தை நிலவரத்துக்கு ஏற்ப  அது மாறும். இந்த நடைமுறை அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலாகும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வீடு வாங்க கடன் பெறும் போது, அதற்கான வட்டிவீதம், அடிக்கடி மாறும் தன்மையில் நிர்ணயிக்கப்படுவது உண்டு. இந்த வகையில் வீட்டுக்கடன் எவ்வளவு தரலாம் என்று இதுவரை வங்கிகள் தான் முடிவு செய்தன.
அவ்வப்போது ரியல் எஸ்டேட் நிலவரப்படி, சந்தையில் மாற்றங்கள்  ஏற்படுகின்றன. அதனால் சந்தை நிலவரப்படி, வீட்டுக்கடன் தரலாம் என்றும், அடிக்கடி மாறுவதால் குறிப்பிட்ட கால வரையறைக்குள் வைத்து வீட்டுக்கடனை நிர்ணயிக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

இப்படி செய்வதால், வீட்டுக்கடன் வழங்குவதில் வெளிப்படை தன்மை இருக்கும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது. இந்த அடிப்படையில் ரிசர்வ் வங்கி வீட்டுக்கடன் வட்டியையும் அவ்வப்போது நிர்ணயிக்கும்.   தனி நபர் கடன், சிறு கடன்கள் எல்லாவற்றையம் சந்ைத நிலவரப்படி நிர்ணயிக்கலாம். எதிர்காலத்தில் இது பெரும் பலனை வாடிக்கையாளர்களுக்கு தரும் என்றும் எதிர்பார்க்கிறது. பெட்ரோல், டீசல் விலையை சந்தை நிலவரப்படி நிர்ணயிப்பதால் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது. அரசிடம் விலை நிர்ணயிக்கும் அதிகாரம் இல்லை. அதுபோல, வீட்டுக்கடன், அதன் மீதான வட்டியும் கூட இப்படி சந்தை அடிப்படையில் நிர்ணயிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது.

ஏற்கனவே சில தனியார் வங்கிகள் இந்த முறையை கடைபிடிக்க துவங்கி விட்டன. சர்வதேச வங்கிகள் பலவும் இதன் படி தான் கடன்கள், வட்டியை நிர்ணயிக்கின்றன. அதன் படி, தனியார் வங்கிகள் இந்த முறையை அமல்படுத்தி உள்ளன. ‘இது பலவகையில் எங்களுக்கு பலன் தருகிறது. வாடிக்கையாளர்களுக்கும் வெளிப்படை தன்மையை காட்ட முடிகிறது’ என்று வங்கி அதிகாரி ஒருவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்