ஆதார் எண் வேண்டாமா? வாபஸ் பெற வருது சட்டம்: மத்திய அரசு தீவிரம்
2018-12-07@ 02:24:22

புதுடெல்லி: ஆதார் எண் தேவையில்லை என்று நீங்கள் விரும்பினால், தாராளமாக வாபஸ் பெறலாம். ஆதார் சர்வரில் இருந்து உங்கள் தகவல்கள் எல்லாம் நீக்கப்பட்டு விடும். ஆதார் எல்லாவற்றுக்கும் கட்டாயமாக இருக்க கூடாது; மக்கள் விரும்பினால் வாபஸ் பெற அனுமதிக்கலாம். தனியார் ஆதார் கார்டு கேட்கக்கூடாது; அரசு சில விஷயங்களுக்கு தொடரலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது. இதன்படி, ஆதார் அமைப்பு, இது தொடர்பாக சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. ஆதார் சட்டத்தில் மேற்ெகாள்ள உள்ள திருத்தங்களை சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், அமைச்சரவை அங்கீகரிக்கும்.
அமைச்சரவை ஒப்புதல் கிடைத்ததும், ஆதார் அமைப்பு இதை அமல்படுத்தும். விரைவில் இந்த திருத்தம் நடைமுறைக்கு வந்து விட்டால், யார் வேண்டுமானாலும் வாபஸ் பெறலாம். ஆதார் வெப்சைட்டில் ‘ஆப்ட் அவுட்’ என்று ஒரு பகுதி இருக்கும். அதில் சென்று, உங்கள் ஆதார் எண்ணை வாபஸ் பெறுவதாக பதிவு செய்தால் வாபஸ் ஆகி விடும். அத்துடன், ஆதார் பற்றிய உங்கள் தகவல்கள் அனைத்தும் நீக்கப்பட்டு விடும்.
மத்திய அமைச்சரவை விரைவில் கூடி இது தொடர்பாக சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மானியம் கிடைக்காது
காஸ் சிலிண்டர் மானியம், ஆதார் எண்ணை அடிப்படையாக வைத்து தான் வங்கியில் செலுத்தப்படுகிறது. அரசு திட்டங்களில் கிடைக்கும் சலுகைகள், மானியங்கள் பெற ஆதார் கட்டாயம் தான். ஆதார் வாபஸ் பெற்றால் மானியம் தானாக நின்று விடும்.
எங்கு கட்டாயம்?
* அரசு துறைகள் இன்னும் ஆதார் எண்ணை அதிகாரப்பூர்வமான ஒரு சான்றாக வைத்திருக்கின்றன.
* அரசு திட்டங்களில் பங்கேற்கவும் ஆதார் எண் கட்டாயம்.
* பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு சரி தான் என்று கோர்ட் சொல்லிவிட்டதால், பான் எண் வைத்திருப்போருக்கு ஆதார் வாபஸ் பெறுவது இயலாது.
* பான் இல்லாதவர்கள், அது தேவையில்லாதவர்களுக்கு ஆதார் எண் வேண்டாம் என்றால் வாபஸ் பெறலாம். அவர்களுக்கும் சில அரசு துறை விஷயங்களில் ஆதார் தேவைப்பட்டால், வாபஸ் வாங்கிய பின் சிக்கல் தான்.
மேலும் செய்திகள்
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கூகுளில் டிஷ்யூ பேப்பரை தேடினால் பாக். கொடி
எனி டெஸ்க் செயலி மூலமாக வங்கி கணக்கில் பணம் திருட்டு
அஞ்சல் துறை ஏடிஎம்மில் 2 லட்சம் பேர் பணம் எடுக்க முடியாமல் தவிப்பு: டெபிட் கார்டு வழங்காமல் இழுத்தடிப்பு
அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று மீண்டும் தொடக்கம்
ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை...... வாகன ஓட்டிகள் அவதி
லாட்டரி ஜிஎஸ்டி: நாளை முடிவு
மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்
உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்
அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!
20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்