பெண்கள் விடுதியில் ரகசிய கேமிரா வழக்கு சிசிபிக்கு மாற்ற போலீசார் முடிவு
2018-12-07@ 02:23:40

சென்னை: பெண்கள் விடுதியில் கேமரா பொருத்திய வழக்கினை சிசிபிக்கு மாற்ற போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை, ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வேலைக்கு செல்லும் பெண்களுக்கான தங்கும் விடுதியை நடத்தி வந்த குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த சம்பத்ராஜ் என்ற சஞ்சீவி (48). இவர் நடத்திய விடுதியில் 6 பெண்கள் தங்கி இருந்தனர். விடுதியில் ரகசிய கேமரா வைத்திருந்ததாக சஞ்சீவியை கைது செய்தனர்.மேலும் அவர் இதனை இணையதளங்களில் வெளியிடவும் திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
விடுதியில் தங்கியிருந்த பெண்கள் கொடுத்த புகாரின்பேரில், ஆதம்பாக்கம் சஞ்சீவியை சிறையில் அடைத்தனர். மேலும் சஞ்சீவி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசாராலும் கடந்த 2012ம் ஆண்டு மோசடி வழக்கு ஒன்று பதிவாகி நிலுவையில் உள்ளதால் தற்போதுள்ள இந்த வழக்கினையும் மத்திய குற்றபிரிவு போலீசார் விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரக் கூடும் என்பதால் இந்த வழக்கினை சிசிபிக்குமாற்றி விட சட்ட விதிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
திருப்பத்தூர் அருகே புதிய கள்ளக்காதலனை கொலை செய்த பழைய கள்ளக்காதலன்
தஞ்சையில் மது போதையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை... போதை ஆசாமிக்கு அடி உதை
நெல்லை அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸ் ஏட்டு கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை
வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை வழக்கில் சென்னை யோகா மாஸ்டருக்கு ஆயுள்: திருச்சி மகிளா கோர்ட் தீர்ப்பு
மனைவியை தாக்கியதாக தலைமை காவலர் மீது போலீசில் புகார்
மதுரையில் முகமூடிக்கும்பல் அட்டகாசம் அடகுக்கடையை உடைத்து 1,500 சவரன் கொள்ளை
கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி
ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்
பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்