SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரதமர் மோடி தகவல் அம்பேத்கரின் கொள்கையை மத்திய அரசு பின்பற்றுகிறது: நினைவு தினத்தில் தலைவர்கள் அஞ்சலி

2018-12-07@ 02:18:43

புதுடெல்லி: அம்பேத்கரின் 62வது நினைவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.இந்திய  அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கர். அவர்  அரசியலமைப்பு வரைவுக்குழுவின் தலைவராகவும் விளங்கினார். சிறந்த பொருளாதார  நிபுணர் மற்றும் அரசியல்வாதியாக திகழ்ந்த அம்பேத்கர் கடந்த 1956ம் ஆண்டு  டிசம்பர் 6ம் தேதி காலமானார். அவரது நினைவு தினம் மகாபரிநிர்வான் திவாஸ்  என்ற பெயரில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அம்பேத்கரின் 62வது நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அம்பேத்கருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘நாட்டை கட்டமைப்பதில் அம்பேத்கர் ஆற்றிய பங்குக்கு இந்த நாடே கடமைப்பட்டுள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம், சம வாய்ப்பு மற்றும் சம உரிமையை அம்பேத்கர் வலியுறுத்தினர். `அனைவருக்கும் அபிவிருத்தி’ என்ற அம்பேத்கரின் மந்திரம், மத்திய அரசால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது’ என்று கூறியுள்ளார்.  இதபோல், அம்பேத்கருக்கு  ராகுல் காந்தி நினைவு அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக அவர் தனது  டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அம்பேத்கர் சிலை முன் ராகுல்  கைகளை கட்டியபடி இருக்கும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதன்  கீழே வரலாற்றை மறந்தவர்களால் வரலாற்றை உருவாக்க முடியாது’ என்ற  அம்பேத்கரின் வாசகம் இடம் பெற்றுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்