SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தல் நடக்கும் தெலங்கானாவில் காங். தொண்டர் வீட்டில் 3 கோடி பணம் பறிமுதல்: இதுவரை 109.7 கோடி சிக்கியது

2018-12-07@ 02:17:20

திருமலை: தெலங்கானா சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற உள்ளது. அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, வாக்காளர்களுக்கு கட்சிகள் பணம் கொடுப்பதை தடுக்க, மாநிலம்  முழுவதும் போலீசார் சிறப்பு சாவடிகளை அமைத்து சோதனைநடத்தி வருகின்றனர்.  இந்நிலையில், வரதன்னாபேட் தொகுதிக்குட்பட்ட காஜிபேட்டையில் உள்ள காங்கிரஸ் தொண்டர் அம்ருதாராவ் வீட்டில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்தற்காக கட்டுக்கட்டாக பணம்  வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே, அவருடைய வீட்டில் அதிரடியாக நுழைந்த போலீசார், கட்டுக்கட்டாக மறைத்து வைக்கப்பட்டு இருந்த  3 கோடியை பறிமுதல் செய்தனர்.
, இம்மாநிலத்தில் தேர்தல் தொடங்கியதில் இருந்து நேற்று முன்தினம் வரையில், 109.7 கோடி ரொக்கம், 10.87 கோடி மதிப்புள்ள  மதுபாட்டில்கள், 8 .923 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்