SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று விசாரணை பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு மனு: ஓய்வு நீதிபதி அறிக்கைக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

2018-12-07@ 02:17:16

புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.  தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து,  ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இது பற்றி ஆராய ஓய்வு நீதிபதி தருண் அகர்வால் குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் ்அமைத்தது. இந்த குழு  கடந்த மாதம் அளித்த ஆய்வறிக்கையில்,”ஒரு சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என குறிப்பிடப்பட்டது. இதையடுத்து அறிக்கையை பரிசீலனை செய்த ஆணையம் அதன் நகலை தமிழக அரசு, ் வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கி பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அதன்படி,  தமிழக அரசு நேற்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில்,”ஸ்டெர்லைட் ஆலையை நிபந்தனைகளுடன் திறக்கலாம் என்ற மூவர் குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது.  இந்த பிரச்்னையில்  குழு தலையீடு செய்ய அதிகாரம் கிடையாது.  இந்த ஆலையினால் சுமார் 5லட்சம் டன் அளவிற்கு காப்பர் கழிவுகள் அப்பகுதியில் உள்ளது. இதனை உரிய பாதுகாப்போடு வெளியேற்ற ஆணையம் உத்தரவிட வேண்டும். இதுநாள் வரையில் இந்நிறுவனம் தரமான மூலப்பொருள் உபயோகப்படுத்தவில்லை என்பது தற்பொது தெரிந்துள்ளது.  

அதனால்,  மூவர் குழு அறிக்கையை ரத்து செய்து அதற்கு தடை செய்ய வேண்டும்’ ?என கூறப்பட்டுள்ளது. வேதாந்தா நிறுவனமும் நேற்று பதில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது, தீர்ப்பாயம் புதிய உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்