SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிபிஐ இயக்குனர்கள் மோதல் வழக்கு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

2018-12-07@ 02:17:08

புதுடெல்லி: மத்திய அரசு்க்்கு எதிராக சிபிஐ இயக்குனர்அலோக் வர்மா தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டு கூறிக் கொண்டதால், இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். இதை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.

நேற்று நடந்த விசாரணையில் மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘‘அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா இடையேயான பனிப்போர் கடந்த ஜூலை மாதமே உச்சக்கட்டத்தை எட்டியது. இருவரும்பூனைகள் போல் சண்டையிட்டு, சிபிஐ அமைப்பை கேலிக்கூத்தாக்கி விட்டனர். அதனால்தான், இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு இருவரையும் விடுமுறையில் அனுப்பியது.’’ என்றார்.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில்,

‘‘அதிர்ச்சியான, அசாதரணமான சூழ்நிலை ஏற்பட்டதால்தான் சிபிஐ அமைப்பின் நடவடிக்கையை சிவிசி கண்காணிக்க ேவண்டிய நிலை ஏற்பட்டது’’ என்றார். அப்ேபாது நீதிபதிகள் குறுக்கிட்டு கூறுகையில், ‘‘இருவருக்கும்  ஒரேநாள் இரவில் சண்டை ஏற்படவில்லை. அவர்களை விடுமுறையில் அனுப்பும் முன் தேர்வுக்குழுவிடம் அரசு ஆலோசித்து இருக்க வேண்டும். சிபிஐ நலனை காக்கும் வகையிலும் அரசின் நடவடிக்கை நியாயமாக இருக்க வேண்டும்’’ என கூறி, இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

  • mexicomigrant

    மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

  • 11-12-2018

    11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்