SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சபரிமலையில் உள்ள வாபர் பள்ளிவாசலுக்கு 40 இளம்பெண்களுடன் செல்ல தமிழக இந்து அமைப்பு திட்டம்: கேரள போலீஸ் அறிக்கையால் பதற்றம்

2018-12-07@ 02:17:04

திருவனந்தபுரம்: எரிமேலியில் உள்ள வாவர் பள்ளிவாசலுக்கு 40 இளம்பெண்களை அழைத்து செல்ல தமிழகத்தை சேர்ந்த இந்து அமைப்பு திட்டமிட்டுள்ளதால் சபரிமலையில் பதற்றம் அதிகரித்துள்ளது.  சபரிமலையில் இளம்பெண்கள் தரிசனம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது முதல் கேரளாவில் பதற்றம் நிலவி வருகிறது. தற்போது, 2 ஐஜிக்கள், 6 எஸ்பி.க்கள் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட போலீசார், சபரிமலையில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த இந்து அமைப்பு ஒன்று 40 இளம்பெண்களை சபரிமலைக்கு அழைத்து செல்ல திட்டமிட்டு உள்ளதாக, கேரள காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக கேரள தென் மண்டல ஏடிஜிபி சுனில் காந்த், பத்தனம்திட்டா மற்றும் கோட்டயம் மாவட்ட எஸ்பி.க்களுக்கு முன்னெச்சரிக்கை  சுற்றிக்கை அனுப்பி, பாதுகாப்பை பலப்படுத்தும்படி அறிவுறுத்தி உள்ளார். சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், வாவர் பள்ளி வாசலுக்கு இளம் பெண்களை அழைத்து செல்வதன் மூலம் பிரச்னையை தீவிரப்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த அந்த அமைப்பு திட்டமிட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, எரிமேலி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பாட்டில்  விற்க அனுமதியில்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

  • mexicomigrant

    மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

  • 11-12-2018

    11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்